AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்  – பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Aug 2026 08:40 AM IST

ஈரோடு, ஆகஸ்ட் 12 : ஈரோடு மாவட்டம் பவானி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே குசி்சிப்பாளையம் என்ற ஊரில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.

அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி

இந்த பள்ளியில் ஏமம்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த யோகேஷ் என்பவர் 6 ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் இவர் ஆகஸ்ட் 11, 2026 நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது மதிய உணவுக்கு பின் குடிநீர் குழாயில் டிபன் பாக்ஸ் கழுவ சென்றுள்ளார். பள்ளியில் தண்ணீர் வராததால், அருகிலுள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு யோகேஷ் சென்றிருக்கிறார். அப்போது தண்ணீரில் மின்சார வயர் அறுந்து விழந்திருக்கிறது. இதனை கவனிக்காத யோகேஷ் அதில் காலை வைத்திருக்கிறார். அதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

இதையும் படிக்க : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14 வரை தொடரும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை

அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு மயிலம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் மாணவன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. இதனையடுத்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் அப்பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதனையடுத்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை நிர்மலாவை இடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குச்சிப்பாளையம் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..

இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த ஈரோடு ஆட்சியர் கந்தசாமி, பவானியில் அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலியான சம்பவத்தில் விசாரணைக்காக 2 குழுக்கள்
அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவன் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரி மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவனின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். ஒருவர் உயிரிழந்தாலும் சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம் என்று தெரிவித்தார்.

Follow Us