தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14 வரை தொடரும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை
சென்னை, ஆகஸ்ட் 12 : தமிழ்நாட்டில் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலைமையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 12 : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 12, 2026 இன்றும், ஆகஸ்ட் 13, 2026 நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தமிழகத்தின் பிற பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 14 வரை தொடரும் மழை
அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14, 2026 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 15, 2026 முதல் ஆகஸ்ட் 17, 2026 தேதி வரை 3 நாட்களுக்கு மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வளர்ப்பு நாய்களைத் தெருவில் விடும் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம்.. சென்னை மாநகராட்சி அதிரடி..




வெப்பநிலை நிலவரம்
வட உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் ஆகஸ்ட் 14, 2026 வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இயல்பை விட சற்று அதிகமாகவும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை ஆகஸ்ட் 12, 2026 இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
குமரிக்கடலின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 12, 2026 வரையும், தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடலின் சில பகுதிகளில் ஆகஸ்ட் 15, 2026 வரையும், தென் மேற்கு வங்கக்கடலின் சில பகுதி, அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதியில் ஆகஸ்ட் 15, 2026 தேதி வரையும், மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் ஆக.15-ம் தேதி வரையும் பலத்த சூறாவளி காற்று வீசும். எனவே, இப்பகுதிகளுக்கு மேல் குறிப்பிட்டுள்ள தேதிகள் வரை செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க : கட்டுக்கடங்காத காட்டுத்தீ.. சதுரகிரியில் பக்தர்கள் மலையேற தடை..
இதற்கிடையில் ஆகஸ்ட் 11, 2026 நேற்றிரவு சென்னை தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், பம்மல் அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் அலுவலகம் முடிந்து செல்லும் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் அவதியடைந்தனர்.