AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?

Gold and Silver Price In Chennai Today | சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையி, வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது.

Gold Price : மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.400 உயர்வு.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Aug 2026 10:37 AM IST

சென்னை, ஆகஸ்ட் 12 : ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கம் தொடர் விலை உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 12, 2026) தங்கம் விலை (Gold Price) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆகஸ்ட் மாதத்தில் தொடர் உயர்வை சந்தித்து வரும் தங்கம்

ஜூன் மாதத்தில் கடும் உயர்வை சந்தித்து வந்த தங்கம் ஒரு கிராம் ரூ.15,000-ல் இருந்து ரூ.13,000 ஆக குறைந்தது. பின்னர் ஜூலை மாதத்தில் சிறிய அளவிலான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தாலும், தங்கம் விலை ரூ.14,000-த்தை தாண்டாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் தான், ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை ரூ.14,000-த்தை கடந்துள்ளது.

இதையும் படிங்க : அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது?.. செப்டம்பரில் FMGC நிறுவனங்கள் எடுக்கும் முக்கிய முடிவு!

ஈரான் போர் சற்று தணிந்துள்ளது, அமெரிக்க மத்திய வங்கி வட்டியை உயர்த்தபோவதில்லை என தகவல் வெளியாகி வருவது இவை அனைத்தும் முதலீட்டாளர்களை தங்கத்தின் பக்கம் திரும்ப செய்துள்ளதன் காரணமாக தங்கம் மீண்டும் விலை உயர்வை சந்திக்க தொடங்கியுள்ளது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Follow Us