விஐபி, விவிஐபிகளின் வருகைக்காக ஆண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு
முதலமைச்சர், அமைச்சர்களை தவிர்த்து பிற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி ஏ பிரிவில் உள்ள கோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 12 : முதலமைச்சர், அமைச்சர்களை தவிர்த்து பிற முக்கிய பிரமுகர்களின் வருகையின் போது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய செலவுகளுக்காக ஓராண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன் படி ஏ பிரிவில் உள்ள கோவை, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சமும், பி பிரிவில் உள்ள நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சமும், சி பிரிவில் உள்ள மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் தலா ரூ.15 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விஐபி, விவிஐபிகளின் வருகைக்காக ஆண்டுக்கு ரூ.6.85 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தவிர்த்து முக்கிய தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளும் மாவட்ட ஆய்வுகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்காக செல்லும்போது அவர்களுக்கான போக்குவரத்து மற்றும் உபசரிப்பு போன்றவற்றுக்காக ரூ.6.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிக்க : அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்




முன்னதாக கோயில்களுக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரும்போது, பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. அதில் திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வருவது தெரிந்தால் குறைந்தது ஒரு நாளைக்கு முன்பே அது குறித்து ஆணையர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அவர்களின் வருகை நேரம் மற்றும் அவர்களுடன் எத்தனை பேர் வருகிறார்கள் என்ற முழு விவரத்தையும் கட்டாயம் அளிக்க வேண்டும். விஐபி-க்கள் வருகையின்போது, கோயில் வளாகத்துக்குள் புகைப்படம் எடுப்பதற்கும், வீடியோ பதிவு செய்வதற்கும் எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது.
மேலும், பிரபலங்களின் வருகையால் பொது பக்தர்களின் தரிசனத்துக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது. அவர்களின் நுழைவு மற்றும் நடமாட்டத்தை முறைப்படி ஒழுங்குபடுத்த வேண்டும். கோயிலின் புனிதத் தன்மை, மரபு மற்றும் ஒழுங்கு பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். முன்கூட்டியே அனுமதி பெற்றவர்கள் அல்லது பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களுக்காக அவசியமான அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் மட்டுமே விஐபி-க்களுடன் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
இதையும் படிக்க : “திமுக – அதிமுக ஒன்னா சேர்ந்துடுச்சா?”.. சபாநாயகர் கூறிய வார்த்தை.. சட்டமன்றத்தில் வெடித்த திடீர் பரபரப்பு!
தேவையில்லாத நபர்களைத் தவிர்க்க வேண்டும். இந்த விதிமுறைகளை அனைத்துக் கோயில்களிலும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித விதிவிலக்கும் இன்றி அனைத்துச் செயல் அலுவலர்களும் மிகக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கோயில்களில் விஐபி கலாச்சாரத்தால் சாமானிய பக்தர்கள் பாதிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இந்துசமய அறநிலையத் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள் ளதாகத் தெரிகிறது.