தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்
மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் தனித் தீர்மானம் கொண்டுவந்தார்.தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.
சென்னை, ஆகஸ்ட் 12 : மக்களவை எம்.பி.க்களின் எண்ணிக்கை 543 என்பதை நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டசபையில் முதல்வர் ஜோசப் விஜய் தனித்தீர்மானம் கொண்டுவந்தார்.தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை தொடங்கியதும், முதல்வர் ஜோசப் விஜய் அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தனித்தீர்மானம்
தீர்மானம் நிறைவேற்றிய பிறகு பேசிய அவர், பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துகிறோம். இது பெண்களுக்கான சலுகை அல்ல, அவர்களுடைய ஜனநாயக உரிமை. ஒரு பெண் அதிகாரம் பெறும்போது ஒரு குடும்பம் உயர்கிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் அதிகாரம் பெறும்போது ஒரு நாடே உயர்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட உள்ள மசோதா 50% இட ஒதுக்கீடு அடிப்படையில் இடங்களை உயர்த்தினாலும், 2026 மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுக்கு பின் நடைபெறும் தொகுதி மறுவரையில் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். மக்களவையில் தற்போதுள்ள எண்ணிக்கையே அப்படியே இருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க : “முதலில் கட்சி மாறியது யார்?”.. செங்கோட்டையன் VS ஓபிஎஸ்.. சட்டமன்றத்தில் வெடித்த சுவாரசியமான விவாதம்!!




தொடர்ந்து பேசிய அவர், நாட்டு மக்கள் தொகையில் பாதி பேர் பெண்கள் தான். அவர்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும். நம் வீட்டு பெண்கள் அரசியலில் முன்னேற இட ஒதுக்கீடு தர வேண்டும். மக்கள் தொகுதி கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் பெண்களுக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. மகளிருக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டாலும், அதை செயல்படுத்துவதில் கால தாமதம் ஆகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையை காரணம் காட்டி நிறுத்தக் கூடாது என்றார்.
கடந்த 1971 ஆம் ஆண்டுக்கு பிறகு உள்ள எந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரையறை செய்தாலும், மக்கள்தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை என்றார்.
இதையும் படிக்க : அதிமுகவில் இருந்து விலகிய சிங்கை ராமசந்திரன்.. முதலமைச்சர் விஜய் முன்னிலையில் த.வெ.கவில் இணைவு..
எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக தொடர்வதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைப்பைத உறுதி செய்ய வேண்டும். அதே நேரம், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது என்றார்.