AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!

Mumbai Landslide: மும்பை குரலா அருகே உள்ள காவ்ஷியா சாவ்ல் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். சுமார் 4 முதல் 6 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மும்பையில் திடீர் நிலச்சரிவு.. 2 பேர் பரிதாப பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!!
நிலச்சரிவு நேர்ந்த இடம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 12 Aug 2026 10:24 AM IST

மும்பை, ஆகஸ்ட் 12: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில நாட்களாகத் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கனமழை, மாநகரின் இயல்பு வாழ்க்கையை முடக்கியுள்ளது. குறிப்பாக, தாழ்வான மற்றும் குன்றுப் பகுதிகளை ஒட்டிய குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இந்த மழை மாறியுள்ளது. இந்தச் சூழலில், இன்று புதன்கிழமை (ஆக.12) அதிகாலை மும்பையின் குரலா மேற்குப் பகுதியில் உள்ள சிராக் நகர், காவ்ஷியா சாவ்ல் குடியிருப்பின் மீது மலைப் பகுதி சரிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.

மேலும் படிக்க: 2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை

சம்பவம் நடந்த விதம்:

இன்று அதிகாலை சுமார் 3:48 மணியளவில், மும்பையின் சிராக் நகர் பகுதியில் உள்ள காவ்ஷியா சாவ்ல் குடியிருப்பில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. தொடர் மழையினால் நனைந்து பலவீனமடைந்திருந்த மலைப்பகுதியின் ஒரு பகுதி, மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் குடியிருப்புகள் மீது திடீரெனச் சரிந்து விழுந்தது. இதில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்தச் சம்பவம் ‘நிலை-2’ பேரிடராக மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் விவரம்:

இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த இருவர் சகில் அன்சாரி (28), முகமது சமீர் (14) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், காயமடைந்த சோஹேல் அன்சாரி (18) மற்றும் முகமது அன்சாரி (14) ஆகிய இருவரும் மீட்கப்பட்டு, குரலாவில் உள்ள பாபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீவிரமடைந்த மீட்புப் பணிகள்:

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை, மும்பை தீயணைப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட மாநகராட்சிப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சுமார் 4 முதல் 6 பேர் வரை இன்னும் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் கருதுகின்றனர். மும்பை மாநகராட்சி மேயர் ரிது தாவ்டே சம்பவ இடத்திற்கு நேரில் வந்து மீட்புப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

மேலும் படிக்க: சாதித்த இந்தியர்கள்.. காமன்வெல்த் பதக்கம் வென்றவர்களை சந்தித்த பிரதமர் மோடி

மற்றொரு துயர சம்பவம்:

நிலச்சரிவு அபாயம் உள்ள இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மழைக் காலத்திற்கு முன்பே வீடுகளைக் காலி செய்யும்படி மாநகராட்சி அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் வழங்கியிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தொடர் மழையினால் நேற்று இரவு மும்பையின் வைல் பார்லே பகுதியில் உள்ள 12 மாடி கட்டிடத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் நிகழ்ந்த இந்த இரு சம்பவங்கள் மும்பை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன.

Follow Us