குளத்துக்குள் வாழும் 16 வயது சிறுவன்.. அரிய வகை பிரச்னையால் 5 ஆண்டுகளாக அவதி.. சோக கதை!
16 Years Old Boy Spends His All The Time In Pond | மேற்கு வங்கத்தில் 16 வயது சிறுவன் ஒருவர் பெரும்பாலான நேரத்தை தண்ணீருக்குள் செலவிடுகிறார். தண்ணீரில் இரூந்து வெளியேறினால் தோல் எரிச்சல் ஏற்படுவதன் காரணமாக அவர் இவ்வாறு தண்ணீருக்குள்ளேயே வாழ்ந்து வருகிறார்.
முர்ஷிதாபாத், ஆகஸ்ட் 11 : மேற்கு வங்கத்தில் (West Bengal) தண்ணீரை விட்டு வெளியே வர முடியால் குளத்துக்குள்ளேயே நாட்களை கழிக்கும் 16 வயது சிறுவனின் நிலை அந்த கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த சிக்கலை எதிர்க்கொண்டு வரும் நிலையில், அரசு விரைந்து சிறுவனுக்கு உதவி செய்ய வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தண்ணீரை விட்டு வெளியேறினால் தாங்க முடியாத எரிச்சல் – சிறுவன் அவதி
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டம், பெல்டாங்கா பகுதியை சேர்ந்தவர் இக்பால் ஷேக் என்ற சிறுவன். இவர் சுமார் 5 ஆண்டுகளாக தனது பெரும்பாலான நேரத்தை தண்ணீரில் கழித்து வருகிறார். தண்ணீரை விட்டு வெளியேறும்போது உடலில் தாங்க முடியாத எரிச்சல் உண்டாவதாகவும், தண்ணீருக்குள் இருக்கும்போது சற்று குளிர்ச்சியாக உணர்வகாதவும் அந்த சிறுவன் கூறுகிறார்.
இதையும் படிங்க : ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு முயற்சி! இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்




தண்ணீருக்குள் இருந்து சித்ரவதை அனுபவிக்கும் சிறுவன்
இவ்வாறு தொடர்ந்து தண்ணீருக்குள்ளே இருப்பதன் காரணமாக அந்த சிறுவன் தனது இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத சூழல் உள்ளது. அடிக்கடி உடலில் எரிச்சல் ஏற்படுவதன் காரணமாக அந்த சிறுவன் 4 முதல் 7 நாட்கள் வரை அந்த குளத்திற்குள்ளேயே இருக்க வேண்டிய சூழலும் உள்ளது. அந்த சிறுவன் சாப்பிடுவது, தூங்குவது என அனைத்தையும் குளத்திற்குள்ளேயே மேற்கொள்வதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 2030க்குள் 4 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மின்சார வாகனத் துறை! இந்தியாவில் புதிய வேலை சந்தை
தொடர்ந்து தண்ணீருக்குள்ளேயே இருப்பதன் காரணமாக இக்பாலின் கை, கால்களில் இருக்கும் தோல் வெளுத்து காணப்படுகிறது. இதுதவிர தண்ணீருக்குள்ளேயே இருப்பதன் விளைவாக சிறுவனுக்கு அடிக்கடி சளி, இருமல் உள்ளிட்ட உடல்நல சிக்கல்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இக்பாலின் குடும்பம் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதன் காரணமாக அவர்களால் அதிக பணம் செலவு செய்து அவருக்கு மருத்துவம் பார்க்க முடியாது. எனவே அரசு அதிகாரிகள் முன்வந்து சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை பெற உதவி செய்ய வேண்டும் என அந்த கிராம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சிறுவன் குளத்தில் இருக்கும் நேரத்தில் குளத்திற்கு செல்லும் பொதுமக்கள் அவருக்கு உணவு பொருட்களை வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.