AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கள்ளநோட்டு புழக்கத்தில் புதிய யுக்தி? குறைந்த மதிப்பு நோட்டுகளை குறிவைக்கும் கும்பல்கள்!

புதிய பாலிமர் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் கள்ளநோட்டு கும்பல்கள் அதிக அளவில் குறைந்த மதிப்பு கொண்ட கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சிக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன. மேலும், பாலிமர் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு, இந்தக் கும்பல்கள் தங்களது கவனத்தை ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பிலான நோட்டுகளுக்கு மாற்றக்கூடும் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர்.

கள்ளநோட்டு புழக்கத்தில் புதிய யுக்தி? குறைந்த மதிப்பு நோட்டுகளை குறிவைக்கும் கும்பல்கள்!
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Aug 2026 11:32 AM IST

ஆகஸ்ட் 8, 2026: இந்தியாவில் கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்படும் முறையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைப்புகள் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல ஆண்டுகளாக கள்ளநோட்டு புழக்கத்தில் ஈடுபட்டு வரும் குற்றக் கும்பல்கள் தற்போது தங்களது செயல்பாட்டு முறையை மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாவூத் இப்ராஹிம் தொடர்புடைய குற்றக் கும்பல்கள் உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் நீண்ட காலமாக இந்தியாவில் கள்ளநோட்டுகளை கடத்தி புழக்கத்தில் விடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ஆதரவளிப்பதாகவும், கள்ளநோட்டு வர்த்தகம் இந்தக் கும்பல்களின் முக்கிய சட்டவிரோத வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ரூ.200, ரூ.500 நோட்டுகளுக்குப் பதில் குறைந்த மதிப்பு நோட்டுகள்:

இதுவரை இந்தக் கும்பல்கள் பெரும்பாலும் ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விடுவதில் கவனம் செலுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களில் கள்ள ரூ.500 நோட்டுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக விசாரணை அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

அதற்குப் பதிலாக, ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 மதிப்பிலான கள்ளநோட்டுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் கள்ளநோட்டு கும்பல்கள் தங்களது செயல்பாட்டு முறையை மாற்றியிருக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

சிறிய நோட்டுகளை குறிவைப்பது ஏன்?

பொதுமக்கள் ரூ.200 அல்லது ரூ.500 நோட்டுகளைப் பெறும்போது அவற்றை கவனமாகச் சரிபார்ப்பது வழக்கம். ஆனால், ரூ.10, ரூ.20, ரூ.50 போன்ற சிறிய மதிப்பிலான நோட்டுகளைப் பெறும்போது பெரும்பாலும் அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதில்லை.

இந்தப் பழக்கத்தை கள்ளநோட்டு கும்பல்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த முயற்சிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் மூலம் அன்றாடப் பணப் பரிவர்த்தனைகளில் எளிதாகக் கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முடியும் என அவர்கள் கணித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஏப்ரல் வரை அதிகரிக்கலாம்:

இந்திய உளவுத்துறை (IB) அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், குறைந்த மதிப்பிலான கள்ளநோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 மதிப்பிலான கள்ளநோட்டுகளை முன்பைவிட அதிக அளவில் புழக்கத்தில் விட முயற்சி மேற்கொள்ளப்படலாம் என அவர் கூறியுள்ளார்.

மேலும், 2027 ஏப்ரல் மாதத்திற்கு முன்பான காலகட்டம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்றும், இந்தக் காலத்தில் கள்ளநோட்டு கும்பல்கள் சிறிய மதிப்பிலான கள்ளநோட்டுகளின் புழக்கத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் மற்றொரு அதிகாரி தெரிவித்துள்ளார்.

புதிய பாலிமர் ரூபாய் நோட்டுகள் வருகை

இந்த நடவடிக்கைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய திட்டமும் ஒரு காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்பிலான பாலிமர் அல்லது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை 2028ஆம் ஆண்டுக்குள் அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

காகித ரூபாய் நோட்டுகளைவிட பாலிமர் நோட்டுகள் நீண்ட காலம் நீடிக்கும். மேலும், அவற்றில் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என்பதால் கள்ளநோட்டு தயாரிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய நோட்டுகளில் வெளிப்படையான சாளரங்கள், சிறப்பு உலோக அம்சங்கள் மற்றும் மைக்ரோ-ஆப்டிக் ஹாலோகிராம்கள் போன்ற நவீன பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.50, ரூ.100 நோட்டுகளுக்கு மாற வாய்ப்பு:

புதிய பாலிமர் நோட்டுகள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு, ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் கள்ளநோட்டு கும்பல்கள் அதிக அளவில் குறைந்த மதிப்பு கொண்ட கள்ளநோட்டுகளைப் புழக்கத்தில் விட முயற்சிக்கலாம் என பாதுகாப்பு அமைப்புகள் சந்தேகிக்கின்றன.

மேலும், பாலிமர் ரூ.10 மற்றும் ரூ.20 நோட்டுகள் புழக்கத்திற்கு வந்த பிறகு, இந்தக் கும்பல்கள் தங்களது கவனத்தை ரூ.50 மற்றும் ரூ.100 மதிப்பிலான நோட்டுகளுக்கு மாற்றக்கூடும் என்றும் அதிகாரிகள் கணித்துள்ளனர். இதனால், கள்ளநோட்டு புழக்கத்தைத் தடுக்க பாதுகாப்பு அமைப்புகள் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us