சட்டசபையில் முதல்வர் விஜய்யின் ஆக்சன் மரபு மீறலா? பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம்!
Chief Minister Vijay Action : தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மு.க.ஸ்டாலின் சைகையை முதல்வர் ஜோசப் விஜய் செய்தது அவை மரபு மீறலா என்பது குறித்து சட்டப் பேரவைத் தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்து உள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜூன் 18- ஆம் தேதி தொடங்கி நேற்று ஜூன் 23- ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதில், ஆளுநர் உரைக்கு முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பதிலுரை வழங்கி இருந்தார். அப்போது, kடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் டாஸ்மாக்கில் கட்சி நிதி வசூலித்ததாகவும், அந்த நிதி தற்போது அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு ஆதாரம் கேட்ட திமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடர் இறுதியில் முதல்வர் விஜய், மு. க. ஸ்டாலின் செய்த ஆக்சனை (சைகை) செய்து காண்பித்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தன.
முதல்வர் விஜய் சைகைக்கு சபாநாயகர் விளக்கம்
இந்த நிலையில், முதல்வரின் சைகைக்கு சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்துள்ளார். அதில், சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, முதல்வர் விஜய் சைகை காண்பித்தது மரபு மீறியது அல்ல. பேரவையில், நடந்தது எதுவும் அவை மீறியது கிடையாது என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இது தொடர்பாக முன்னாள் சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவை விதிகளின்படியும், மரபின்படியும் பேரவையில் இல்லாத ஒருவரை பற்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விமர்சிக்க கூடாது.
மேலும் படிக்க: “திமுக இளைஞர்கள் மீது அடக்குமுறையா?”.. வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!




சபாநாயகர் உத்தரவிட்ட மறுநாளே விதிமீறல்
இதே போல, வாய்மொழியாகவோ அல்லது உடல் மொழியாகவோ விமர்சிக்கவோ, கிண்டல் செய்வதோ, கேலி செய்வதோ உள்ளிட்ட செயல்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஈடுபடக்கூடாது என்பது சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகருக்கு தெரிந்திருக்கும். இது தொடர்பாக கடந்த 22- ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் உடல் மொழியாகவோ அல்லது வாய் மொழியாகவோ யாரையும் கிண்டல், கேலி செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
சபாநாயகரின் பதிலுக்கு தமிழ்நாடே காத்திருக்கிறது
இதற்கு மறுநாளே முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கிண்டலும், கேலியும் செய்தது அவை உரிமை மீறல் இல்லையா? இவ்வாறான செயல்களில் ஈடுபட்ட முதல்வர் மீது அவை உரிமை மீறல் நடவடிக்கையை பேரவை தலைவர் தாமாக முன்வந்து எடுப்பாரா. ? முதல்வர் இதுபோல செயல்பட அனுமதித்தது நியாயமா. இதற்கான பதிலை எதிர்பார்த்து தமிழ்நாடே காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பாஜக+திமுக+அதிமுக எனும் கொள்கை புடலங்காய்.. திமுக வெளியில் வேறு உள்ளே வேறு – இந்திய கம்யூனிஸ்ட் காட்டம்..