AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“திமுக இளைஞர்கள் மீது அடக்குமுறையா?”.. வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!

காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், "கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்துப் பேசினால் காவல்துறையை ஏவுவது; அதுவே, தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க-வினர் என்றால் காவல்துறை வேடிக்கைப் பார்ப்பதா? இதுதான் நீங்கள் சொல்லும் மாற்றமா?" என த.வெ.க அரசை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

“திமுக இளைஞர்கள் மீது அடக்குமுறையா?”.. வேடிக்கை பார்க்க மாட்டோம்.. தவெக அரசை வெளுத்து வாங்கிய உதயநிதி!
உதயநிதி ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Jun 2026 13:49 PM IST

சென்னை, ஜுன் 24: தமிழக வெற்றிக் கழக அரசின் அடக்குமுறை மற்றும் காவல்துறையின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணியினரை அச்சுறுத்த நினைத்தால், அதனை ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். திமுக-வின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்து, பல்வேறு பகுதிகளில் தொடர் கூட்டங்களை நடத்தி வரும் தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்குள் நள்ளிரவில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து கைது செய்ய முயற்சித்துள்ளனர். ஆளுங்கட்சியை விமர்சித்து இளைஞர்களைத் திரட்டுவதால் மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், காவல்துறையின் இந்த நள்ளிரவு அத்துமீறலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இதையும் படிக்க: அதிமுக – திமுக கவுன்சிலர்கள் மோதல்.. பறந்த பேப்பர்கள்.. களேபரமான சென்னை மாநகராட்சி கூட்டம்.. நடந்தது என்ன?

தாக்குதல் நடத்திய தவெகவினர் மீது நடவடிக்கை:

இதேபோல, சமீபத்தில் நடைபெற்ற Gen Z கூட்டத்தில் பேசிய தம்பி கனி என்பவர் மீது, சைதாப்பேட்டையில் வைத்து த.வெ.க ரவுடிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்குள்ளான திமுக இளைஞர் கனி, பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், தாக்குதல் நடத்திய தவெக-வினர் மீது இதுவரை எந்தவொரு வழக்கோ அல்லது சட்டப்படியான நடவடிக்கையோ காவல்துறை எடுக்கவில்லை என்று உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். மாறாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தம்பி கனியை காவல்துறையினரே மிரட்டி, கட்டாயப்படுத்தி டிஸ்சார்ஜ் செய்ய வைத்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலையும் அவர் உடைத்துள்ளார்.

ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா?:

காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான செயல்பாட்டைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “கழக இளைஞர்கள் ஆளுங்கட்சியையும் – அரசையும் எதிர்த்துப் பேசினால் காவல்துறையை ஏவுவது; அதுவே, தாக்குதல் நடத்தியவர்கள் த.வெ.க-வினர் என்றால் காவல்துறை வேடிக்கைப் பார்ப்பதா? இதுதான் நீங்கள் சொல்லும் மாற்றமா?” என த.வெ.க அரசை நோக்கி காரசாரமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நொறுங்கும் போலி பிம்பம்:

தற்போதைய ஆளுங்கட்சியின் நிர்வாகத்திறனற்ற தன்மையையும், அதன் செயல்பாடுகளையும் சாடிய உதயநிதி ஸ்டாலின், இந்த அரசை “#SofaModel அரசு” (சோபா மாடல் அரசு) என்று கடுமையாக விமர்சித்துள்ளார். “நிர்வாகத்திறனற்ற சோபா மாடல் அரசின் போலி பிம்பம், இன்றைய இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், தங்களது தோல்விகளை மறைப்பதற்காக இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையையும், அதிகாரத்தையும் கையில் எடுத்திருக்கிறார்கள்” என்று அவர் சாடியுள்ளார்.

இதையும் படிக்க: “திமுகவின் சரிவு தற்காலிகமானது”.. ஆட்சி மாற்றத்திற்குப் பின் கூடிய சென்னை மாமன்றம்.. தவெக அரசை சாடிய மேயர் பிரியா!!

திமுக வேடிக்கை பார்க்காது – இறுதி எச்சரிக்கை:

காவல்துறையையும், அரசு அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி திமுக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என்று த.வெ.க அரசு நினைத்தால், அதற்குப் பயந்து பின்வாங்கப் போவதில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், “கழக இளைஞர்களை அச்சுறுத்த நினைத்தால், கழகம் அதனை ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது” என த.வெ.க அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இறுதி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

Follow Us