பயணிகள் கவனத்திற்கு! ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஆகஸ்ட் 12 : ஓணம் பண்டிகை கேரள தேசத்தினர் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த 2026 ஆம் ஆண்டு திருவோணம் பண்டிகை வருகிற ஆகஸ்ட் 26, 2026 அன்று கொண்டாடப்படவிருக்கிறது. இந்த நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக இயக்கப்படும் சிறப்பு ரயில்கள்
இதுதொடர்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஆகஸ்ட் 25, 2026 அன்று மாலை 6.30 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்படும் ஹூப்பள்ளி – கோட்டயம் சிறப்பு ரயில் (எண்: 07351) மறுநாள் மாலை 4.40 மணிக்கு கோட்டயம் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 26, 2026 அன்று இரவு 10.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்படும் கோட்டயம் – ஹூப்பள்ளி சிறப்பு ரயில் (எண்: 07352) மறுநாள் இரவு 8 மணிக்கு ஹூப்பள்ளி நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் எர்ணாகுளம், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, தும்கூரு, பிரூர் உள்ளிட்ட நிலையங்களில்
நின்று செல்லும்.




இதையும் படிக்க : “நீட்டை கொண்டு வந்தது யாருங்க?”.. சட்டசபையில் வெடித்த விவாதம்.. தவெக, காங்கிரஸ், திமுக இடையே காரசாரம்!
தெற்கு ரயில்வே அறிவிப்பு
South Western Railway introduces Onam Festival Special Trains between Hubballi and Kottayam to make your festive travel convenient and comfortable.
🎟️ Advance Reservation opens at 08:00 hrs on 30.07.2026.#SouthernRailway #IndianRailways #Onam2026 #Onam pic.twitter.com/yYWUnCH4IU
— Southern Railway (@GMSRailway) July 29, 2026
சென்னை-கொல்லம் இடையே சிறப்பு ரயில்
இதேபோல ஆகஸ்ட் 12, 2026 முதல் செப்டம்பர் 2, 2026 வரை புதன்கிழமைகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் சென்னை சென்ட்ரல் -கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும்.
இதையும் படிக்க : அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி – தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் – பரபரப்பு தகவல்
மறுமார்க்கமாக, ஆகஸ்ட் 13, 2026 முதல் செப்டம்பர் 3, 2026 தேதி வரை வியாழக்கிழமைகளில் கொல்லத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் கொல்லம்-சென்னை சென்ட்ரல் வாராந்திரச் சிறப்பு ரயில் (எண்: 06120) மறுநாள் காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் மாவேலிக்கரை, செங்கணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.