கே.என்.நேரு மீது இறுகும் பிடி.. நகராட்சித்துறை ஊழல் வழக்கில் தவெக அரசின் அதிரடி மூவ்.. நீதிமன்றத்தில் சூடுபிடித்த வாதம்!
K. N. Nehru Corruption Case: கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமங்களில் ரூ. 634 கோடி ஊழல் வழக்கில் தமிழக வெற்றிக் கழக அரசு வழக்கை தொடருவதாக தெரிவித்துள்ளது. இதனால், நேரு மீதான பிடி மேலும் இறுகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி துறையில் 2,538 உதவி இன்ஜினியர்கள், இளநிலை இன்ஜினியர்கள் உள்ளிட்ட பணிகளில் ஆட்களை நியமனம் செய்வதற்கு ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகவும், இது தொடர்பாக, துறை அமைச்சராக இருந்த கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு ஆதாரங்களுடன் அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருந்தது. இதன் மீது நடவடிக்கை எடுக்காத நிலையில், அதிமுக எம்பி இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவையும் செயல்படுத்தாத காரணத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தன் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யுமாறு கே. என். நேரு தரப்பிலும், தமிழக அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
மறு ஆய்வு மனுவை திரும்ப பெறுவதாக வாதம்
இதில், கே. என். நேரு மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை வழக்குப்பதிவு செய்வதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் இந்த வழக்கை ஜூன் 23- ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் தர்மாதிகாரி, ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, முன்னாள் அமைச்சர் கே. என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற தீர்ப்பையும் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஆட்சியில் தாக்கல் ஆன மதுவை திரும்ப பெறுகிறோம்.
மேலும் படிக்க: மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றமா? அது பேராபத்து… சீமான் விடுத்த எச்சரிக்கை!




மனுவை திரும்ப பெற அனுமதிக்க கூடாது
இந்த வழக்கை தவெக அரசு தொடர்ந்து நடத்த இருப்பதால் மனுவை திரும்ப பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில், வேறு ஏதேனும் உள்நோக்கம் இல்லை என்று வாதத்தை முன் வைத்தார். அப்போது, கே. என். நேரு தரப்பில், தற்போது ஆட்சி மாறினாலும், நடைபெற்ற விசாரணையை மாற்ற முடியாது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் இதற்கு உள்ளன. எனவே, மறு ஆய்வு மனுவை திரும்ப பெறக் கூடாது என்று வாதிடப்பட்டது.
ஜூலை 10- ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மறு ஆய்வு மனு, கடந்த திமுக அரசு தாக்கல் செய்த மனுவை திரும்ப கோரும் தவெக அரசின் மனு ஆகியவற்றை ஜூலை 10- ஆம் தேதி விசாரிப்பதாக ஒத்தி வைத்தனர். அத்துடன் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள வழக்கின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவையும் பிறப்பித்தனர்.
மேலும் படிக்க: அனைத்திலும் 6 மாதம் அவகாசம் கேட்கும் ரீல்ஸ் கோஷ்டி அரசு… முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கடும் விமர்சனம்!