BREAKING : குழந்தை பிறக்கும் போதே தங்க மோதிரம்.. தாய்மாமன் திட்டத்துக்கு ரூ.755 கோடி நிதி ஒதுக்கீடு.. முதல்வர் விஜய் உத்தரவு!
Thai Maman Thanga Mothiram scheme : தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கு ரூ. 755 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்கம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் ஜோசப் விஜய் தெரிவித்து இருந்தார். தற்போது, இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் குழந்தைகளுக்காக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சுமார் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதற்காக ரூ.755.83 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பத்தினர்
பிறந்த குழந்தை மற்றும் பிரசவித்த தாயையும் கௌரவிக்கும் விதமாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களை சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும். தமிழர் பண்பாட்டு மரபை பிரதிபலிக்கும் வகையில் தாய்மாமனின் பங்கை ஏற்று தங்க மோதிரம் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ பல்லவி ஆண் குழந்தைக்கு “டிவிகே” என பெயர்… முதல்வர் ஜோசப் விஜய் சூட்டினார்!




தங்க மோதிரம் திட்டம் எப்போது தொடக்கம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கான ஒப்பந்த புள்ளிகளை உடனே கோருவதற்கு முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தத் திட்டமானது வருகிற செப்டம்பர் 15- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த நாளில் திட்டம் தொடங்கப்பட்டாலும் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளான கடந்த ஜூன் 22- ஆம் தேதி ( திங்கள்கிழமை) முதல் பிறந்த குழந்தைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தமிழக அரசு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெற்றி தமிழகம் திட்டத்தின் கீழ்
வெற்றி தமிழகம் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஒப்புதல் வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது, அரசு பள்ளிகளில் 5- ஆம் வகுப்பு வரை இருக்கும் காலை உணவு திட்டத்தை பெரியார் பிறந்த நாள் அன்று 8- ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்த வகையில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடங்கி வைக்க உள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மழை..!