செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை? முதல்வர் விஜய்யை குறிப்பிட்டு உதயநிதி கடும் விமர்சனம்!
Udhayanidhi Condemned CM Vijay Story: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் கூறிய குட்டி கதைக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கணவனை தேடும் மனைவியின் கதை தமிழ்நாட்டுகே தெரியும் என்று விமர்சனம் செய்தார்.
தமிழக சட்டப்பேரவை கடந்த ஜூன் 18- ஆம் தேதி கூடிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முதல்வர் விஜய் பதிலுரையுடன் முடிவடைந்தது. இன்று நடைபெற்ற சட்டமன்ற நிகழ்வில் முதல்வர் விஜய் பேசுகையில், கடந்த திமுக ஆட்சி குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அப்போது, டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று அடித்த கொள்ளை ஒவ்வொன்றாக கஜானாவுக்குள் சேர்த்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, முதல்வர் விஜய் பதிலுரை வழங்கி முடித்த பின்னர் எதிர்க்கட்சியினருக்கு பேச வாய்ப்பு வழங்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார். இதை ஏற்க மறுத்த திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில், முதல்வர் விஜயின் பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்கிரிப்ட் அவதூறுகளை அள்ளி வீசிய விஜய்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் ஸ்கிரிப்ட் அவதூறுகளை முதலமைச்சர் விஜய் அள்ளி வீசி ஆக்டிங் பெர்ஃபார்மன்ஸ் காட்டி உள்ளார். சட்டப்பேரவையின் லைவ் கேமராவை, சினிமா கேமரா என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இல்லாமல் சிங்கிள் டேக்கில் சூட் செய்ய வேண்டும் என்று பேரவை தலைவர் மெனக்கட்டது ஏற்புடையது அல்ல.
மேலும் படிக்க: பாஜக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்… ஜான்பாண்டியன் எடுத்த திடீர் முடிவு!
முதல்வர் பதிலுரையில் பஞ்ச் டயலாக் மட்டுமே இருந்தது
முதல்- அமைச்சரின் பதிலுரையில் ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளும், பஞ்ச் டயலாக்குகளும் மட்டும்தான் இருந்ததே தவிர, மின்வெட்டு பிரச்சனை, விவசாயிகள் பிரச்சனை, பயிர் கடன்கள் தள்ளுபடி, சட்டம் ஒழுங்கு மோசமாகி இருக்கும் நிலையில் அது தொடர்பான வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை. மேலும், எதிர்க்கட்சிகள் தூண்டுதலின் பேரில், விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை கொச்சைப்படுத்தும் முதல்வர் பேச்சு கண்டிக்கத்தக்கது. குட்டி கதை சொல்கிறேன் என்ற முதல்வரின் உளறல் சட்டப்பேரவையின் மாண்புக்கு முற்றிலும் எதிரானதாகும்.
கணவனை தேடும் மனைவியின் கதை
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவியின் கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும். எனது, நடிகர் விஜய் என்பதை மறந்துவிட்டு, இனியாவது தமிழகத்தின் முதல்- அமைச்சராக ஜோசப் விஜய் நடந்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஆளுநர் உரைக்கு முதல்வர் பதிலுரை வழங்கினார். அப்போது, முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை மறைமுகமாக குட்டிக்கதை கூறி முதல்வர் விஜய் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ பல்லவி ஆண் குழந்தைக்கு “டிவிகே” என பெயர்… முதல்வர் ஜோசப் விஜய் சூட்டினார்!



