AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தைரியம் இருந்தா சொல்லுங்க… முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் விஜய், திமுக, அதிமுக பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் தைரியம் இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார்.

தைரியம் இருந்தா சொல்லுங்க… முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்
Udhayanidhi Stalin Responds Cm Joseph Vijay
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 23 Jun 2026 12:14 PM IST

சென்னை, ஜூன் 23 : சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான ஜூன் 23, 2026 இன்று ஆளுநரின் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்தார். அப்போது திமுக, அதிமுக பெயரை குறிப்பிடாமல் விமர்சனம் செய்தார். இதனையடுத்து அவரது பேச்சுக்கு எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது தைரியம் இருந்தால் சொல்லுங்கள், அதற்கு தயாராக இருக்கிறோம் என அவர் தெரிவிக்க, தவெக எம்எல்ஏகள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் பதில்

சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்த பேசிய முதல்வர் விஜய், குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதிர்கட்சிகள் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுவதை ஏற்க முடியாது. அதோடு அரசு தரப்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் நிலையில், இந்த விவகாரத்தை அரசியல் லாபத்திற்காக எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன என்றார். எந்த கட்சியையும் அவர் குறிப்பிடாமல் பேசியதால் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்

உதயநிதி ஸ்டாலின் அளித்த பேட்டி

 

இதனையடுத்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, நேற்று நான் பேசும்போது சில அமைச்சர்கள் குறுக்கிட்டு பேசுனாங்க. அதற்கு நீங்கள் அனுமதி அளித்தீர்கள், அதே போல் முதல்வர் விஜய் பேசிய சில வார்த்தைகள் தவறானது. அவர் பார்ட்டி பண்ட் என்று சொல்லியிருக்கிறார். எந்த பார்ட்டி பன்ட் என்று தைரியம் இருந்தால் சொல்லுங்கள். நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்றார். அவர் பேசியதும் ஆளுங்கட்சி எம்எல்ஏகள் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அவைத் தலைவர் அமைதிப்படுத்தினார்.

இதையும் படிக்க : முதல்வர் ஜோசப் விஜய் பிறந்த நாளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மழை..!

தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நேற்று நான் பேசி முடிந்ததும் அவை முடிந்துவிட்டது என்றார்கள். நாங்கள் வீட்டுக்கு கிளம்பிவிட்டோம். டிவியை பார்த்தால் இன்னொரு அமைச்சர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இதில் என்ன மரபு? நீங்கள பேசிக்கொண்டே இருப்பீர்களா என்றார்.

Follow Us