சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு 1091 என்ற உதவி எண் அறிவிப்பு.. முழு விவரம் இதோ..
1091 என்ற உதவி எண்ணின் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை பொதுமக்கள் நேரடியாக தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு புகாரும் கவனமாக பதிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் தனி கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஜூன் 22, 2026: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கான அதிகாரப்பூர்வ உதவி எண் 1091 என தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கும், அவசர சூழ்நிலைகளில் உடனடி காவல் உதவியை வழங்குவதற்கும் இந்த சிறப்பு உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு சிறப்பு:
இந்த 1091 உதவி எண், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 112 அவசரகால உதவி எண்ணுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் எந்த பகுதியிலிருந்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக காவல்துறையை தொடர்புகொண்டு உதவி பெற முடியும். குடும்ப வன்முறை, பாலியல் தொல்லை, இணையவழி துன்புறுத்தல், மிரட்டல், பின்தொடர்தல், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இந்த எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்களை முன்னுரிமை அடிப்படையில் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படையின் முக்கிய நோக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி பாதுகாப்பு வழங்குவதோடு, சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும். குறிப்பாக பள்ளி, கல்லூரி, பணியிடம், பொது இடங்கள் மற்றும் இணையதளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கையாளுவதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: நீங்கள் வாங்கிய மின்மாற்றிகள் லட்சணம் தெரியும்.. அமைதியாக இருக்கலாம் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் vs செந்தில் பாலாஜி..
1091 என்ற உதவி எண்ணின் மூலம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை பொதுமக்கள் நேரடியாக தொடர்புகொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு புகாரும் கவனமாக பதிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய மாநில காவல் கட்டுப்பாட்டு அறையில் தனி கண்காணிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஓவ்வொரு அழைப்பிற்கு தனி முக்கியத்துவம்:
மேலும், ஒவ்வொரு அழைப்பிற்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சிறப்பு கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. புகார் அளிப்பவர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படுவதுடன், அவர்களின் விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: வந்தே பாரத் ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்.. இனி மிஸ்ஸே ஆகாது… என்ன அது!
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், பாதுகாப்பான சமூக சூழலை உருவாக்கவும் இந்த புதிய முயற்சி முக்கிய பங்காற்றும் என காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. அவசர சூழ்நிலைகளில் தயக்கமின்றி 1091 என்ற எண்ணை தொடர்புகொண்டு உதவி பெறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.