AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்பராஸ்.. அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி இதோ!

Sai Sudharsan Replacement: காயம் காரணமாக விலகியிருந்த சாய் சுதர்ஷனுக்குப் பதிலாக சர்பராஸ் கானை பிசிசிஐ இந்திய அணியில் சேர்த்துள்ளது. காயம் காரணமாக சாய் சுதர்ஷன் (Sai Sudharsan) இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் சுதர்ஷன் தற்போது காயத்திலிருந்து மீள்வதற்காக பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார்.

IND vs SL: சாய் சுதர்சனுக்கு பதிலாக சர்பராஸ்.. அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி இதோ!
சாய் சுதர்சன் - சர்பராஸ் கான்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Aug 2026 21:33 PM IST

இந்தியா மற்றும் இலங்கை (IND vs SL) அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தத் தொடருக்காக, காயம் காரணமாக விலகியிருந்த சாய் சுதர்ஷனுக்குப் பதிலாக சர்பராஸ் கானை பிசிசிஐ இந்திய அணியில் சேர்த்துள்ளது. காயம் காரணமாக சாய் சுதர்ஷன் (Sai Sudharsan) இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சாய் சுதர்ஷன் தற்போது காயத்திலிருந்து மீள்வதற்காக பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ALSO READ: கேப்டன் கில் முதல் குல்தீப் வரை.. இலங்கை டெஸ்ட் தொடரில் படைக்கப்போகும் சாதனை!

மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ:

சாய் சுதர்ஷனுக்குப் பதிலாக மற்றொரு வீரரை பிசிசிஐ இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 9ம் தேதி சமூக வலைதளப் பதிவு மூலம் அறிவித்துள்ளது. பிசிசிஐ கூறியிருப்பதாவது, ‘இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சாய் சுதர்ஷன் விலக்கப்பட்டுள்ளார். அவர் பெங்களூருவில் உள்ள பிசிசிஐ சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸில் காயத்திலிருந்து குணமடைந்து வருகிறார். அவரது வலது பெருவிரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து சுதர்சன் குணமடைந்து வருகிறார். மேலும் அவரது குணமடைதல் சீராக உள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழு சாய் சுதர்சனின் உடல்நிலையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. தற்போது, ​​இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான அணியில் சாய் சுதர்ஷனுக்குப் பதிலாக சர்பராஸ் கானை தேர்வுக் குழு சேர்த்துள்ளது. 2026 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி காலிக்குப் புறப்படுவதற்கு முன்பு, சர்பராஸ் கொழும்பில் அணியுடன் இணைவார்’ என்று தெரிவித்துள்ளது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய சர்பராஸ்:

நீண்ட காலத்திற்குப் பிறகு சர்பராஸ் கானுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் தனது கடைசி டெஸ்ட் போட்டியை 2024 நவம்பரில் மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். சர்பராஸ் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் 11 இன்னிங்ஸ்களில் 37 சராசரியில் 371 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், தற்போதைக்கு இந்திய அணியின் ஆடும் லெவனில் சர்பராஸ் கானுக்கு இடம் கிடைப்பது கடினமாகத் தெரிகிறது. தேவ்தத் படிக்கல் நல்ல ஃபார்மில் இருப்பதுடன், பயிற்சிப் போட்டியில் சதம் அடித்துள்ளார். எனவே, அவர் 3-வது இடத்தில் பேட்டிங் செய்யலாம்.

ALSO READ: கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. சிக்ஸர் மழை பொழிந்த சிராஜ்.. இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி!

டெஸ்ட் போட்டி அட்டவணை

இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர் 2026 ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டி 2026 ஆகஸ்ட் 15 முதல் 19 வரை காலியில் நடைபெறும். இரண்டாவது டெஸ்ட் போட்டி 2026 ஆகஸ்ட் 23 முதல் 27 வரை கொழும்பில் நடைபெறும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறத் தேவையான புள்ளிகளை இந்தியா பெறுவது அவசியம் என்பதால், இந்தத் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இருப்பினும், இந்திய அணியின் முக்கிய வீரர்கள் காயம் காரணமாக அணியிலிருந்து விலக்கப்பட்டதால், கேப்டன் சுப்மன் கில்லின் கவலைகள் அதிகரித்துள்ளன. முன்னதாக, ஜஸ்பிரித் பும்ரா, நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகிய வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

Follow Us