Team India: காயத்தால் சிகிச்சையில் 13 இந்திய வீரர்கள்.. குழப்பத்தில் திணறும் கில் – காம்பீர்!
Indian Players Injury Update: இந்திய தேசிய அணியின் தற்போதைய மற்றும் வருங்கால வீரர்கள் என மொத்தம் 13 இந்திய கிரிக்கெட் வீரர்கள், காயங்கள் காரணமாக என்சிஏ-வில் சிகிச்சை மற்றும் உடற்தகுதி மறுவாழ்வு பெற்று வருகின்றனர். இந்திய அணியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் காய பிரச்சினைகள், கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு தலைவலியாக உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) பெங்களூருவில் உள்ள அதிநவீன சிறப்பு மையம் (சிஓஇ/என்சிஏ), தற்போது இந்திய அணியின் (Indian Cricket Team) முக்கிய வீரர்களுக்கான சிகிச்சைக்கான மையமாக மாறியுள்ளது. இந்திய தேசிய அணியின் தற்போதைய மற்றும் வருங்கால வீரர்கள் என மொத்தம் 13 இந்திய கிரிக்கெட் வீரர்கள், காயங்கள் காரணமாக என்சிஏ-வில் சிகிச்சை மற்றும் உடற்தகுதி மறுவாழ்வு பெற்று வருகின்றனர். இந்திய அணியில் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் காய பிரச்சினைகள், கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் ஆகியோரின் பிளான்களை கடுமையாகப் பாதித்துள்ளதால், பிசிசிஐ சமீபத்தில் உடற்தகுதி விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
ALSO READ: இனி இதுதான் டைம்..! வீரர்களின் உடற்தகுதி சோதனையை கடுமையாக்கிய பிசிசிஐ!
காயமடைந்தோர் பட்டியலில் உள்ள குறிப்பிடத்தக்க நபர்கள்:
பிசிசிஐ 13 வீரர்களின் பெயர்களையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, முக்கிய வீரர்கள் என்சிஏ அணியில் உள்ளனர்.




ஜஸ்பிரித் பும்ரா:
முழங்கால் காயம் காரணமாக இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து விலகியிருந்த பும்ரா, தற்போது தனது உடற்தகுதியை மீண்டும் பெறுவதற்காகக் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார்.
ஹர்திக் பாண்ட்யா:
முதுகுவலியால் அவதிப்பட்டு வரும் பாண்ட்யா, தற்போது அதிலிருந்து குணமடைந்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ஹர்ஷித் ராணா, வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி, ஆகாஷ் தீப் மற்றும் சாய் சுதர்ஷன் உள்ளிட்ட பல முக்கிய மர்றும் இளம் வீரர்கள் ‘சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ்’ மையத்தில் மருத்துவர்களின் மேற்பார்வையில் உள்ளனர்.
கில் அதிருப்தி
தனது அணியை சேர்ந்த வீரர்களுக்கு ஏற்படும் தொடர்ச்சியான காயப் பிரச்சினைகள் குறித்து கேப்டன் சுப்மன் கில் வெளிப்படையாகத் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். அதில், ”வீரர்களால் தொடர்ச்சியாக 2-3 போட்டிகளில் விளையாட முடிவதில்லை. இதனால், ஒவ்வொரு தொடரிலும் அவசர மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது, இது அணியின் சமநிலையைப் பாதிக்கிறது,” என்று கூறினார்.
ஒட்டுமொத்தமாக, 13 முக்கிய வீரர்கள் ஒரே நேரத்தில் காயமடைந்ததும், அவர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) சேர்க்கப்பட்டதும் இந்திய கிரிக்கெட்டின் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இது கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கவுதம் காம்பீர் ஆகியோருக்கு பெரிய தலைவலியாக உள்ளது. மேலும், வரவிருக்கும் தொடரில் ஒரு வலுவான அணியைக் களமிறக்குவது பிசிசிஐ-க்கு ஒரு கடினமான சவாலாக இருக்கும்.
ALSO READ: பாடாய்ப்படுத்தும் காயம்.. விலகிய சாய் சுதர்சன்.. இலங்கை தொடரில் இடம்பெறும் பேட்ஸ்மேன் யார்?
இந்திய கிரிக்கெட் அணி, களத்தில் உள்ள பிரச்சனைகளை விட, களத்திற்கு வெளியே உள்ள உடற்தகுதிப் பிரச்சனைகளுக்காகவே தற்போது செய்திகளில் இடம்பிடித்துள்ளது. வரவிருக்கும் முக்கியத் தொடர்களைக் குறிவைத்துள்ள பிசிசிஐ-க்கு, அதன் எதிர்காலத் திட்டங்களில் இருந்த ஹர்திக் பாண்டியா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட 13 முக்கிய வீரர்கள் காயம் காரணமாக தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) இணைந்ததால் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.