AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: மானவ், ரிஷப் பண்ட் செய்த தவறால் விக்கெட் மிஸ்.. சட்டென கே.எல்.ராகுல் செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ!

India vs Sri Lanka Cricket XI Warm Up Match: கேப்டன் கே.எல். ராகுல் அணியின் 21வது ஓவரை மானவ் சுதாரிடம் கொடுத்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில், பேட்டிங் செய்துகொண்டிருந்த நிஷான் மதுஷ்கா 66 ரன்களில் இருந்தார். மதுஷ்கா அந்தப் பந்தை யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நோக்கி அடித்துவிட்டு ஓடினார். ஆனால், பேட்டிங் செய்யாத ரவிந்து ரசந்தா பந்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் அவர் ஓடவில்லை.

IND vs SL: மானவ், ரிஷப் பண்ட் செய்த தவறால் விக்கெட் மிஸ்.. சட்டென கே.எல்.ராகுல் செய்த விஷயம்.. வைரலாகும் வீடியோ!
மானவ் - பண்ட் செய்த செயல்Image Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2026 19:03 PM IST

இந்தியாவும் இலங்கை (IND vs SL) லெவன் அணியும் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 7ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட பயிற்சிப் போட்டியில் விளையாடி வருகின்றன. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணிக்கு (Indian Cricket Team) இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பயிற்சி போட்டியாக பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இலங்கை XI அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்தப் போட்டியில், நிஷான் மதுஷ்கா மற்றும் ரவிந்து ரசந்தா ஆகியோர் இலங்கைக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தனர். இதன் காரணமாக, இலங்கை அணியின் முதல் விக்கெட்டை எடுக்க இந்திய பந்துவீச்சாளர்கள் திணறினர். அப்போது, இலங்கை 110 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட் வீழ்ந்தது. இந்த விக்கெட்டும் ஒரு குழந்தைத்தனமான விளையாட்டால் நிகழ்ந்தது என்றால் நம்ப முடிகிறதா..? இதன்போது மானவ் சுதார் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் செய்த தவறு ஒன்றை, கே.எல். ராகுல் சரியான நேரத்தில் சரிசெய்து இந்தியாவிற்கு முதல் விக்கெட்டைப் பெற்றுத் தந்தார்.

ALSO READ: மீண்டும் காயத்தில் சிக்கிய கில்.. இலங்கை தொடருக்கு தலைமை வகிப்பாரா?

ரிஷப் பண்ட்-மானவ் சுதர் செய்த தவறு என்ன?


கேப்டன் கே.எல். ராகுல் அணியின் 21வது ஓவரை மானவ் சுதாரிடம் கொடுத்தார். அந்த ஓவரின் நான்காவது பந்தில், பேட்டிங் செய்துகொண்டிருந்த நிஷான் மதுஷ்கா 66 ரன்களில் இருந்தார். மதுஷ்கா அந்தப் பந்தை யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நோக்கி அடித்துவிட்டு ஓடினார். ஆனால், பேட்டிங் செய்யாத ரவிந்து ரசந்தா பந்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அதனால் அவர் ஓடவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால் பந்தை மானவ் சுதாரிடம் வீசினார். அப்போது, மிக நீண்ட நேரம் ஓடி வந்த மதுஷ்காவை பார்த்த மானவ், விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டை நோக்கி வீசினார். அந்த பந்தானது, ரிஷப் பண்டின் தலைக்கு மேலே சென்றது. பந்து தன் தலைக்கு மேலே சென்றதைக் கண்ட ரிஷப் பண்ட் ஸ்டம்பை நோக்கி சென்றபோது, கிளவுஸ் அணிந்த கையோடு தெரியாமல் பெயில்ஸை தட்டினார்.

இருப்பினும், ரிஷப் பண்ட் தவறவிட்ட பந்தை கே.எல். ராகுல் பிடித்துக்கொண்டு விக்கெட்டை நோக்கி ஓடினார். பெயில்ஸ் கீழே விழுந்ததும், அவர் பந்துடன் சேர்த்து ஸ்டம்புகளையும் தூக்கினார். பெயில்ஸ் கீழே விழுந்த பிறகு ஸ்டம்புகளைத் தூக்கினால் மட்டுமே அவுட்டாகும். இல்லையெனில் அவுட் வழங்கப்படாது.

ALSO READ: வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் – இந்திய வீரர்களுக்கு கம்பீர் எச்சரிக்கை

கே.எல். ராகுலின் டைமிங்கால் இந்தியா முதல் விக்கெட்டைப் பெற்றது. ஆனால், ரிஷப் பண்ட் மற்றும் மானவ் சுதாரின் செயல்பாடுகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், இந்திய பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசினர். இதனால், அவர்கள் விக்கெட்டுகளை எடுக்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இலங்கை முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 368 ரன்கள் எடுத்து, வலுவான நிலையில் உள்ளது. பிரசித் கிருஷ்ணா, ரவீந்திர ஜடேஜா, குர்னூர் பிரார் ஆகியோர் பந்துவீச்சில் ஏமாற்றமளித்தனர்.

Follow Us