IND vs JAP: வாய்ப்புக்காக காத்திருக்கும் வைபவ் சூர்யவன்ஷி.. ஜப்பான் டி20யில் அதிரடியாக களம்?
Vaibhav Sooryavanshi: ஜப்பானுக்கு எதிரான இந்த ஒரே ஒரு டி20 போட்டி, வைபவ் போட்டிப் பயிற்சி பெறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையக்கூடும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முக்கியப் போட்டிகளுக்கு முன்பு களத்தில் இறங்குவது, வைபவ் சூர்யவன்ஷி தன்னம்பிக்கை பெறுவதற்கும் உதவக்கூடும்.
இந்தியா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு (IND vs JAP) இடையேயான வரலாற்று சிறப்புமிக்க போட்டி, ஜப்பானின் சானோ நகரில் இன்று அதாவது 2026 செப்டம்பர் 22ம் தேதி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இரு அணிகளும் முதல் முறையாக நேருக்கு நேர் மோதுவதால், இந்தப் போட்டி சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜப்பானுக்கு எதிரான போட்டியில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் (Vaibhav Sooryavanshi) பெயரே அதிகம் பேசப்படுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் வைபவ் சூர்யவன்ஷி ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. எனவே, ஜப்பானுக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ALSO READ: ஜியோஸ்டாரில் இந்தியா – ஜப்பான் போட்டியை பார்க்க முடியாதா? நேரலையில் எங்கு காணலாம்?
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்குமா?
வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைப்பதற்கான சாத்தியக்கூறு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள விவிஎஸ் லட்சுமணனின் கைகளில் உள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய அணிக்கு பொறுப்பேற்றுள்ள லட்சுமண், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதில் பெயர் பெற்றவர். எனவே, இது சூர்யவன்ஷிக்கு ஒரு வாய்ப்பை பெற்று தரலாம்.




ஜப்பானுக்கு எதிரான இந்த ஒரே ஒரு டி20 போட்டி, வைபவ் போட்டிப் பயிற்சி பெறுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமையக்கூடும். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் முக்கியப் போட்டிகளுக்கு முன்பு களத்தில் இறங்குவது, அவர் தன்னம்பிக்கை பெறுவதற்கும் உதவக்கூடும்.
தொடருமா சஞ்சு – அபிஷேக் கூட்டணி..?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சனும் அபிஷேக் ஷர்மாவும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். கவுதம் காம்பீரின் கூற்றுப்படி, அந்த இரு உலகக் கோப்பை வெற்றியாளர்களின் கூட்டணியைப் பிரிப்பது சரியல்ல என்பதால் வைபவ் காத்திருக்க வேண்டியிருந்தது.
ஜப்பானுக்கு எதிரான இந்திய அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம். 3 டி20 போட்டிகளிலும் விளையாடிய ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பு ஓய்வளிக்கப்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், அர்ஷ்தீப் சிங் அணிக்குத் திரும்பலாம்.
ஜப்பானுக்கு எதிரான இந்தப் போட்டி, வைபவ் சூர்யவன்ஷி தனது திறமையை நிரூபிக்க ஒரு பெரிய வாய்ப்பாக அமையக்கூடும். சூர்யவன்ஷி ஆடும் லெவனில் இடம்பிடித்தால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக இந்த 15 வயது பேட்ஸ்மேனான வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தை காண அனைவரும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.
ALSO READ: வரலாற்று போட்டியில் மழை எச்சரிக்கை.. இந்தியா – ஜப்பான் டி20க்கு சிச்சல்!
இந்தியாவின் சாத்தியமான 11 பேர்:
ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, சிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், யாஷ் தாக்கூர்.