BCCI: 100 ஆண்டுகளை நிறைவு செய்யப்போகும் பிசிசிஐ.. உலக லெவன் அணியுடன் மோதும் இந்திய அணி!
Team India vs World XI: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த நிகழ்வை முன்னிட்டு ஒரு போட்டியை ஏற்பாடு செய்யலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அதில், உலக லெவன் அணி, இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) சிறந்த லெவன் அணிக்கு எதிராக விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. பிசிசிஐ அத்தகைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது.
பிசிசிஐ (BCCI) தனது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஒரு தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள உள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த நிகழ்வை முன்னிட்டு ஒரு போட்டியை ஏற்பாடு செய்யலாம் என்று வதந்திகள் பரவி வருகின்றன. அதில், உலக லெவன் அணி, இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) சிறந்த லெவன் அணிக்கு எதிராக விளையாட இருப்பதாக கூறப்படுகிறது. பிசிசிஐ அத்தகைய ஒரு போட்டியை ஏற்பாடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையின் அறிக்கையின்படி, பிசிசிஐயின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத் திட்டங்கள் குறித்த விவாதத்தின் போது இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்காக பிசிசிஐ ஒரு குழுவை அமைக்கலாம். மேலும், இந்த கண்காட்சிப் போட்டியாக ஏற்பாடு செய்யப்படலாம்.
ALSO READ: 5 அணிகள், 69 வீரர்கள்.. பிசிசிஐயின் பரபரப்பான மாஸ்டர் பிளான்
இருப்பினும், அனைத்தும் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளன. குறிப்பிட்ட தேதி, இடம் அல்லது வீரர்களின் பட்டியல் எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. பிசிசிஐ 1928 டிசம்பரில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் நூற்றாண்டு விழா 2028-ல் வரவிருக்கிறது. அதன்படி, கடந்த 2026 செப்டம்பர் 18 அன்று மும்பையில் நடைபெற்ற வாரியத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில், பொதுச் சபை இந்த கொண்டாட்டத்தின் முக்கியப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஆண்டு முழுவதும் தொடரும் என்று பிசிசிஐ சூசகமாகத் தெரிவித்துள்ளது.




வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு முடிவு..
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, டி20 மற்றும் 50 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறது. இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று டி20 போட்டிகளிலும் விளையாடும். இந்தியாவுக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி நேற்று முன் தினம் அதாவது 2026 செப்டம்பர் 19ம் தேதி அறிவித்தது. டி20 தொடருக்கான கேப்டனாக வலது கை பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முதலில், ஒருநாள் தொடர் நடைபெறும். அதில் விராட்- ரோஹித் ஜோடி இடம்பெறும். பின்னர், வருகின்ற 2026 அக்டோபர் 6 ஆம் தேதி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கும். இந்த இரண்டு தொடர்களும் இந்தியாவில் நடைபெறும்.
ALSO READ: டி20யில் 2வது இடத்திற்கு சரிந்த இந்தியா.. முதலிடத்திற்கு திரும்பிய இங்கிலாந்து!
தொடக்க ஆட்டக்காரர் கமில் பூரன் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 வயதான கமில், தனது அதிரடி பேட்டிங்கிற்காக அறியப்படுகிறார். அவர் இதுவரை 8 டி20 போட்டிகளில் விளையாடி, 159.64 ஸ்டிரைக் ரேட்டில் 273 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 2 அரை சதங்களை அடித்துள்ளார், அதில் அவரது அதிகபட்ச ஸ்கோர் ஆட்டமிழக்காமல் எடுத்த 81 ரன்கள் ஆகும். நட்சத்திர பேட்ஸ்மேன் ஷிம்ரான் ஹெட்மயர் ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், சிபிஎல் தொடருக்குப் பிறகு குணமடைய அவருக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர் டி20 தொடருக்காக அணியில் இணைவார். மறுபுறம், இந்த 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம்பெற்றிருந்த குவென்டின் சாம்சனும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹோல்டர் அணியில் சேர்க்கப்படவில்லை.