AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs AFG 3rd T20: மீண்டும் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சூர்யவன்ஷி.. சாம்சனுக்கு வாய்ப்பு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!

Sanju Samson: இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறுகிறது. 2026 அக்டோபரில் தொடங்கும் இந்தத் தொடரும் இந்திய மண்ணில்தான் நடைபெற உள்ளது. இந்தத் தொடர், இந்தியாவில் வைபவ் சூர்யவன்ஷி பங்கேற்கும் முதல் டி20 சர்வதேசப் போட்டியாக அமையக்கூடும்.

IND vs AFG 3rd T20: மீண்டும் பெஞ்சில் அமரவைக்கப்பட்ட சூர்யவன்ஷி.. சாம்சனுக்கு வாய்ப்பு.. குழப்பத்தில் ரசிகர்கள்..!
சஞ்சு சாம்சன் - வைபவ் சூர்யவன்ஷி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 17 Sep 2026 20:43 PM IST

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 சர்வதேசப் போட்டியில் இந்திய அணிக்கு (Indian Cricket Team) வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர் முழுவதும் வைபவ் சூர்யவன்ஷி பெஞ்சில் அமர்ந்திருந்தார். டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி ஸ்டேடியத்தில் இன்று அதாவது 2026 செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்ற போட்டிக்கான ஆடும் லெவனில் இந்திய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) ஒரே ஒரு மாற்றத்தை மட்டுமே செய்தார். இருப்பினும், அந்த மாற்றம் வைபவ் அல்ல, மாறாக அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக யாஷ் தாக்கூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

சஞ்சு சாம்சனுக்கு இடம்:


ALSO READ: மேற்கு இந்தியத் தீவுகள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ரோஹித் சர்மா, விராட் கோலி மீண்டும் வாய்ப்பு..

தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கு, சஞ்சு சாம்சனின் அபாரமான ஆட்டத்தால் அணியில் இடம் பெற முடியாமல் போனது. முதல் போட்டியில் சொதப்பிய சஞ்சு, இரண்டாவது போட்டியில் 57 ரன்களும், தற்போது நடைபெற்று வரும் போட்டியிலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2வது டி20 போட்டியில் அரைசதம் அடித்ததன் காரணமாக, மூன்றாவது டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பை சஞ்சு சாம்சனுக்கு பெற்றுத் தந்தது. வைபவ் சூர்யவன்ஷி கடந்த 2026 ஜூலை மாதம் இங்கிலாந்துக்கு எதிராக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். இருப்பினும், அவர் இதுவரை இந்திய மண்ணில் ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெறுகிறது. 2026 அக்டோபரில் தொடங்கும் இந்தத் தொடரும் இந்திய மண்ணில்தான் நடைபெற உள்ளது. இந்தத் தொடர், இந்தியாவில் வைபவ் சூர்யவன்ஷி பங்கேற்கும் முதல் டி20 சர்வதேசப் போட்டியாக அமையக்கூடும். வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இதுவரை 6 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். 6 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த வைபவ் சூர்யவன்ஷி, 2 அரை சதங்கள் உட்பட, 32.16 சராசரி மற்றும் 189.21 ஸ்டிரைக் ரேட்டுடன் 193 ரன்கள் எடுத்தார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 ஆகும்.

ALSO READ: 52 சிக்ஸர்களுடன் 892 ரன்கள்.. சூர்யகுமாரின் சாதனையை குறிவைக்கும் இளம் வீரர்?

மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் XI

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா .

Follow Us