காலை உணவுத் திட்ட விரிவாக்கம்.. முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!
CM Vijay Launches Kamarajar Breakfast Scheme | தமிழக அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. இதனை விரிவுப்படுத்தும் வகையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று காமராஜர் காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளார்.
சென்னை, செப்டம்பர் 22 : காமராஜர் காலை உணவுத் திட்டம் (Kamarajar Morning Breakfast Scheme) இன்று (செப்டம்பர் 22, 2026) விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார். இதேபோல தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தின் சிறப்புகள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பள்ளி மாணவர்களுக்கு பயனளிக்கும் காலை உணவுத் திட்டம்
பள்ளி மாணவர்கள் ஊட்டச்சத்துடன் இருக்க வேண்டும் என்றும், பள்ளி வருகையை அதிகரித்து இடைநிற்றலை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் 2022 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தை அப்போது முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் நாளடைவில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டது.
இதையும் படிங்க : “விஜய் ஆட்சிக்கு எதிரான முதல் அடி” – மதுராந்தகம் களத்தில் உதயநிதி ஸ்டாலின்




19.34 லட்சம் மாணவர்கள் பயன்
எனவே தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்தின் மூலம் சுமார் 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டம் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சுமார் 19.34 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க : மதுராந்தகத்தில் ஆட்டோ ஓட்டி, டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்த தவெக வேட்பாளர்!
பெயர் மாற்றம் செய்யப்பட்ட திட்டம்
திமுக ஆட்சியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் என இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தவெக ஆட்சியில் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை இருந்த இந்த திட்டத்தை 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் வகையில் நீட்டிக்கப்பட உள்ளது. இதன் மூலம் கூடுதலாக சுமார் 15.30 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைவர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை காலை 8.30 மணி அளவில் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.