AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND W vs SL W: அடித்தது 48 ரன்கள்.. ஷஃபாலிக்கு குவிந்த 2 இமாலய சாதனைகள்!

Shafali Verma Record: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஷஃபாலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்தத் தொடரில் 3 போட்டிகளில் 188 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகத் திகழ்கிறார். இதனுடன் 14 சிக்ஸர்களை அடித்துள்ளார். அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக ஷஃபாலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து சதம் அடித்திருந்தார்.

IND W vs SL W: அடித்தது 48 ரன்கள்.. ஷஃபாலிக்கு குவிந்த 2 இமாலய சாதனைகள்!
ஷஃபாலி வர்மாImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 22 Sep 2026 13:58 PM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு (IND W vs SL W) இடையேயான மகளிர் கிரிக்கெட் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், ​​இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மா வரலாறு படைத்தார். இந்தப் போட்டியில் 10 ரன்களை எட்டிய உடனேயே, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்களைக் குவித்த உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமையை இந்திய மகளிர் அணியின் (Indian Womens Cricket Team) தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா பெற்றார். இதன்மூலம், தென்னாப்பிரிக்க கேப்டன் லாரா வால்வெர்டேயின் சாதனையை முறியடித்தார். லாரா வால்வெர்டே 2026ம் ஆண்டில் இதுவரை 824 ரன்கள் எடுத்திருந்தார். ஷஃபாலி வர்மா இந்த மைல்கல்லைக் கடந்து ஒரு புதிய உலக சாதனையை படைத்தார். இருப்பினும், தங்கப் பதக்கப் போட்டியில், ஷஃபாலி வர்மா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து வெறும் 2 ரன்களில் அரைசதத்தை தவறவிட்டார். இதில், 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களும் அடங்கும்.

ALSO READ: வங்கதேசத்தை வீழ்த்திய பாகிஸ்தான் மகளிர்.. கைக்கு வந்த வெண்கல பதக்கம்!

ஒரே காலண்டர் ஆண்டில் 863 ரன்கள்:

இலங்கைக்கு எதிரான போட்டியில் 48 ரன்கள் எடுத்ததைத் தொடர்ந்து, ஷஃபாலி 2026-ஆம் ஆண்டில் டி20 கிரிக்கெட்டில் 863 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 ரன்கள் எடுத்த வீராங்கனைகள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார்.

  • 863 ரன்கள் – ஷெபாலி வர்மா, இந்தியா (2026)
  • 824 ரன்கள் – லாரா வால்வார்ட், தென்னாப்பிரிக்கா (2026)
  • 800 ரன்கள் – நடாஷா மைல்ஸ், ஹாங்காங் (2026)
  • 779 ரன்கள் – இஷா ஓஜா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2025)
  • 779 ரன்கள் – யாஸ்மின் தாஸ்வானி, ஹாங்காங் (2026)
  • 763 ரன்கள் – ஸ்மிருதி மந்தனா, இந்தியா (2024)

ஒரு வருடத்தில் மகளிர் டி20 சர்வதேசப் போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள்

ரன்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, ஒரு வருடத்தில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலிலும் ஷஃபாலி வர்மா சாதனை படைத்துள்ளார். இலங்கைக்கு எதிராக 3 சிக்ஸர்களை அடித்ததைத் தொடர்ந்து, அவர் 2026-ஆம் ஆண்டில் மொத்தம் 38 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

  • 38 – ஷெபாலி வர்மா, 2026
  • 32 – சாமரி அட்டபட்டு, 2024
  • 25 – சாமரி அட்டபட்டு, 2026
  • 25 – ஹர்மன்பிரீத் கவுர், 2018
  • 21 – சோஃபி டிவைன், 2018
  • 21 – சோஃபி டிவைன், 2020
  • 21 – ஃபாத்திமா சனா, 2026

ALSO READ: 79 ரன்கள் குவித்த ஸ்மிருதி.. இலங்கை அணிக்கு 217 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய மகளிர்!

ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அதிக ரன்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஷஃபாலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். இந்தத் தொடரில் 3 போட்டிகளில் 188 ரன்கள் எடுத்து, அதிக ரன்கள் எடுத்த வீராங்கனையாகத் திகழ்கிறார். இதனுடன் 14 சிக்ஸர்களை அடித்துள்ளார். அரையிறுதிப் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக ஷஃபாலி ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்து சதம் அடித்திருந்தார். அதற்கு முன்பு, ஜப்பானுக்கு எதிரான தொடக்கப் போட்டியில் வெறும் 15 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்தார். இலங்கைக்கு எதிரான தங்கப் பதக்கப் போட்டியிலும் ஷஃபாலி அதிரடியான தொடக்கத்தைக் கொண்டிருந்தார். ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்து 99 ரன்கள் தொடக்கக் கூட்டணி அமைத்து இந்தியாவிற்கு வலுவான தொடக்கத்தை அளித்தார். இலங்கைக்கு எதிராக அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டாலும், அவரது 48 ரன்கள் ஆட்டம் மற்றொரு சாதனையைப் படைத்தது.

Follow Us