AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பவர் ஷேரிங் கொடுத்த தவெக ஆட்சியில் பவர் இல்லை.. உதயநிதி பேச்சால் சிரிப்பலை!

Udhayanidhi Stalin Spoke: தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு பவர் ஷேரிங் கொடுத்த தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பவர் இல்லை என்று எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். இதற்கு பேரவை உறுப்பினர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர் .

பவர் ஷேரிங் கொடுத்த தவெக ஆட்சியில் பவர் இல்லை.. உதயநிதி பேச்சால் சிரிப்பலை!
சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 22 Jun 2026 14:44 PM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று திங்கள்கிழமை காலை 9:30 மணி அளவில் தொடங்கியது. இதில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் நிகழ்ந்து வருகின்றன. பனையூர் தவெக அலுவலகத்தில் மின்வெட்டு நிகழ்ந்துள்ளது. சென்னையில் மின்தடைக்காக முதல் முறையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பவர் ஷேரிங் கொடுத்த ஆட்சியில் பவர் இல்லாமல் போய்விட்டது. திமுக பொதுக்கூட்டத்திலும் மின்தடை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மின்வெட்டு ஏற்படவில்லை. ஆனால், பொதுமக்கள் பார்க்கக்கூடிய செய்தி சேனல்களில் லைவ் ரத்து செய்யப்பட்டது. பவர் ஷேரிங் தந்தீர்களே. பவர் தந்தீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தமிழக வெற்றிக் கழகத்தினர்

தூத்துக்குடி, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெண்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்தவர்கள் பாலியல் குற்றங்களை ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் தளத்தில் பொருட்களை வாங்குவது போல பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களை தமிழக வெற்றிக்கழகம் வாங்கி வருகிறது. ஊழல் சக்தி என்று கூறிவிட்டு, அந்த எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அவர்களை தூய சக்தியாக தமிழக வெற்றி கழகம் மாற்றி வருகிறது.

மேலும் படிக்க: ‘சைகை காட்டி கேலி செய்த எம்எல்ஏக்கள்’.. “இனி இப்படி செய்தால் அவ்ளோதான்!”.. ஸ்ட்ரிக்ட்டாக எச்சரித்த சபாநாயகர்!

ஆள் பிடிக்கும் வேலையை நிறுத்திவிட்டு ஆட்சியில் கவனம் செலுத்த வேண்டும்

ஆள் பிடிக்கும் வேலையை நிறுத்திவிட்டு ஆட்சி நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,500, குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,500 உதவித் தொகையை 6 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். குடும்பத்துக்கு 6 இலவச சிலிண்டர்கள், சட்டம், ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு, விவசாயிகள் பிரச்சனை, பயிர் காப்பீடு இதனை எவ்வளவு காலங்களுக்குள் நிறைவேற்றுவீர்கள் என்று தெரிவிக்க வேண்டும்.

தூர்ந்து போன கட்சியிடமிருந்து எம்எல்ஏக்கள் பர்சேஸ் செய்கிறது

இதற்கு முதல்வர் விஜய் பதிலுரையில் விளக்கம் அளிக்க வேண்டும். தூர்ந்து போன கட்சிகளிடமிருந்து காய்ந்து போன கட்சி எம்எல்ஏக்களை பர்சேஸ் செய்து வருகிறது. ஆளுநர் உரையில் தமிழகத்துக்கான வளர்ச்சி குறித்த அறிவிப்பு ஏதுமில்லை. தமிழக வெற்றிக்கழக அரசை புகழ்ந்து மட்டுமே ஆளுநர் உரை இருந்துள்ளது என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்படுவதாகவும், நாளை செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணிக்கு பேரவை கூடும் என்று சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் தெரிவித்தார்.

மேலும் படிக்க: சட்டமன்றத்தில் கலகலப்பு.. பிரேமலதா விஜயகாந்த் பேச பேச.. குலுங்கி சிரித்த முதல்வர் விஜய்!!

Follow Us