நீட் தேர்வு விவகாரம் – அரசுக்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை
நீட் விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். ஆகவே சட்டபூர்வமாக அழுத்தம் தருவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை சட்ட வல்லுநர்கள், அரசியல் வல்லுனர்களோடு கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூலை 5ஆம் தேதி விடுதலை சிறுத்தைகளின் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெறுகிறது. பேராசிரியர் டாக்டர் கே சந்திரகுமார் அவர்களுக்கு அம்பேத்கர் சுடர் விருதினை வழங்க உள்ளோம். ஆகஸ்ட் 17 ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ் தேசிய மாநாடு நடைபெற உள்ளது.
அரசுக்கு திருமாவளவன் வைத்த முக்கிய கோரிக்கை
நீட் விவகாரம் குறித்து தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். நீட் தேர்வால் தொடரும் தற்கொலைகள் மிகுந்த கவலையளிக்கிறது. இந்திய ஒன்றிய அரசு இதற்கு இணங்கவில்லை ஆகவே சட்டபூர்வமாக அழுத்தம் தருவதற்கு என்னென்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை சட்ட வல்லுநர்கள், அரசியல் வல்லுனர்களோடு கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுகிறது.
கடந்த காலத்தில் விசிக தலைவர் எங்கு இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என ஜெயலலிதா கூறியதாக சொன்னீர்கள், தற்போது அதிமுகவின் நிலை குறித்து கேட்டதற்கு, தேர்தலுக்கு முன்பே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன் 2026 தேர்தலுக்கு பின்பு அதிமுகவின் நிலை கவலைக்குரியதாக மாறும், ஆகவே அதிமுகவை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதன் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியாருக்கு உள்ளது என்பதை திராவிட அரசியலின் மீது நம்பிக்கை உள்ளவன் என்கிற அடிப்படையில் சுட்டிக்காட்டி இருக்கிறேன். ஆனால் அன்றைக்கு அதை பரிகாசிக்கப்பட்டது எனக்கு எதிரான விமர்சனங்களை கூட அதிமுகவினர் செய்தார்கள் ஆனால் இன்றைக்கு அது கவலை அளிப்பதாக மாறி இருக்கிறது. அதிமுகவின் முன்னணி தலைவர்கள் இது குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
சாதிய ஆணவ படுகொலைகள் கடந்த காலங்களில் வெளியே வரவில்லை, அப்போது பெரிதாக வழக்குகளும் பதியப்படவில்லை ஆனால் அண்மை ஆண்டு காலமாக இது குறித்து வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. ஆனால் போதிய நடவடிக்கைகளை அவர்களால் எடுக்க முடியவில்லை இப்போது புதிய அரசு மலர்ந்து இருக்கிறது புதிய முதலமைச்சர் பொறுப்பேற்று இருக்கிறார் இது போன்ற சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்பதில் அவருக்கு ஒரு பொறுப்புணர்வு இருப்பதை உணர முடிகிறது. பெண்களுக்கு சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமை நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக தடுக்க வேண்டும் என்பதற்காக அதிரடிப்படையை காவல் அணியை உருவாக்கி இருக்கிறார். அதேபோல இந்த ஆணவ கொலைகளை தடுப்பதற்கு உரிய காரணம் செலுத்துவார் உரிய நடவடிக்கை எடுப்பார் என நான் நம்புகிறேன். இறைவனை நேரத்தில் உரிய நேரத்தில் தோழமையோடு இதனை சுட்டிக்காட்டுவோம் என்றார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேரலை ஒளிபரப்பு தடை செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு, எப்படி நாடாளுமன்றத்தில் நேரலை ஒளிபரப்பப்படுகிறதோ அப்படி சட்டமன்றத்திலும் தொடர்ந்து நேரலை செய்ய வேண்டும் என்பதை முதல்வரின் நேரடி கவனத்திற்கு நாங்கள் கொண்டு செல்வோம் என்றார்.