அமோனியா வாயு கசிவு விபத்து – தொழிலாளர் நலனில் சமரசம் கூடாது – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
திருவள்ளூர் அருகே இறால் தொழிற்சாலையில் ஜூன் 21, 2026 இன்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக அமைச்சர் அருண் ராஜ் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், தொழிலாளர் நலனில் சமரசம் கூடாது என தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர், ஜூன் 21 : திருவள்ளூர் அருகே இறால் தொழிற்சாலையில் ஜூன் 21, 2026 இன்று அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு பெரும் வித்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 60க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 2 தொழிலாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்தார். இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் இதுகுறித்து தனது பதிவில் தொழிலாளர் நலனிலும் பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என தெரிவித்திருந்தார்.
உதயநிதி ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.




இதையும் படிக்க : சென்னை அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – 2 பேர் பலி
உதயநிதியின் எக்ஸ் பதிவு
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே தனியார் இறால் ஏற்றுமதி தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 7 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பலர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய…
— Udhay (@Udhaystalin) June 21, 2026
இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இதுபோன்ற துயரச் சம்பவங்கள், இனியும் ஏற்படாமல் இருக்க, தொழிற்சாலைகளில் உரிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் (SoP) முறையாக பின்பற்றப்படுகிறதா என்று ஆய்வுகளை நடத்துவதோடு, தேவை ஏற்படின், புதிய SoP-ஐ வெளியிட அரசு முன்வர வேண்டும்.தொழிலாளர் நலனிலும் பாதுகாப்பிலும், எந்தவொரு சமரசத்திற்கும் இந்த அரசு இடம் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் – கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கல் பதிவில், வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களைக் காக்க உரிய மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை இந்த அரசு தொடர் ஆய்வுகள் மூலம் உறுதிசெய்திட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.