AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் – கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவு

ஓசூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக 20 வயது மாணவர் விபரீத முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அந்த மாணவர் உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் – கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 21 Jun 2026 15:02 PM IST

ஓசூர், ஜூன் 21 : ஓசூர் அருகே நீட் தேர்வு அச்சம் காரணமாக 20 வயது மாணவர் விபரீத முடிவெடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தீவிரமாக படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் அந்த மாணவர் உருக்கமான கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார். ஜூன் 21, 2026 இன்று நீட் மறுதேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவரின் மரணம் தற்போது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் விபரீத முடிவு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாலுார் சாலை பகுதியில் தனியார் நிறுவன ஊழியர் சின்னசாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது இளைய மகன் வெற்றியானந்தம் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக படித்து வந்திருக்கிறார். கடந்த முறை நீட் தேர்வில் தோல்வியடைந்தத நிலையில் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். இந்த நிலையில் ஜூன் 21, 2026 இன்று நீட் மறு தேர்வுக்கு அவர் தயாராகி வந்துள்ளார்.

இதையும் படிக்க : தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்

இந்த நிலையில் தந்தை வேலைக்கும் தாய் கடைக்கும் சென்றிருந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாத சூழலை பயன்படுத்தி வீட்டு முன் பக்க அறையில் அவர் விபரீத முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில் கடைக்கு சென்றிருந்த அவரது அம்மா வீடு திரும்பிய நிலையில் மகனை கண்டு அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையினருக்கு கிடைத்த மாணவனின் கடிதம்85909

இதனையடுத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மாணவனின் உடலைக் கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதற்கான காரணம் இதுதான், ஆதாரம் உள்ளது – அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி

இதற்கிடையில் மாணவன் எழுதி வைத்த உருக்கமான கடிதம் ஒன்று காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. அதில், எனது பெற்றோர் மற்றும் அண்ணன் கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்தவன். நீட் தேர்வு பயத்தால் கடந்த ஒரு மாதமாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை. இந்த முறையும் தோற்றுவிடுவேன் என்ற பயத்தில் இந்த முடிவெடுக்கிறேன். எனது பெற்றோர் மற்றும் அண்ணா என்னை மன்னித்துவிடுங்கள் என்று எழுதியுள்ளார்.

(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)

Follow Us