தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி, ஜூன் 20 : தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் எட்டயாபுரம் அருகே ராசாபட்டி என்ற கிராமத்தில் பாலாஜி என்ற பெயரில் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வந்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜூன் 20, 2026 இன்று பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் பட்டாசு ஆலையில் இருந்த 3 அறைகள் முழுவதும் சேதமடைந்திருக்கிறது.
தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து
இந்த நிலையில் இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். மேலும் பட்டாசு ஆலையில் இருந்த 25 பேர் இந்த விபத்தில் படுகாயமடைந்திருக்கின்றனர். இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது அந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன.
இதையும் படிக்க : தூத்துக்குடியில் பயங்கரம்.. வடமாநில தொழிலாளி கொடூரமாக அடித்து கொலை.. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!




இந்த நிலையில் தற்போது வெளியான தகவலில் ஆலையில் ஜூன் 20, 2026 இன்று 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்திருக்கின்றனர். மேலும் சனிக்கிழமை என்பதால் பணியாளர்களுக்கு சம்பளம் போடும் பணிகள் நடைபெற்று வந்திருக்கிறது. இந்த நிலையில் பட்டாசு ஆலையில் ஒரு அறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சுமார் 25க்கும் மேற்பட்ட பணியாளர்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் உயிரிழந்த தொழிலாளியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : “உசுரு முக்கியம்.. காலை மட்டும் உடைங்க!”.. கணவனைத் தாக்க கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்த மனைவி!!
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றனர். பட்டாசு ஆலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது. அரசு தலையிட்டு இனி விபத்துகள் ஏற்படாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.