AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“உசுரு முக்கியம்.. காலை மட்டும் உடைங்க!”.. கணவனைத் தாக்க கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்த மனைவி!!

இந்தக் கொடூரத் தாக்குதல் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. இத்தாக்குதல் குறித்துப் பாதிக்கப்பட்ட தாமோதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, கூலிப்படையை ஏவிய குற்றத்திற்காக தாமோதரனின் மனைவி வசந்தாவைக் கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடினர்.

“உசுரு முக்கியம்.. காலை மட்டும் உடைங்க!”.. கணவனைத் தாக்க கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்த மனைவி!!
தாக்குதல் நடத்திவிட்டு தப்பிய நபர்கள்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Jun 2026 11:11 AM IST

தாம்பரம், ஜுன் 20: சென்னை தாம்பரம் அடுத்த வெங்கம்பாக்கம் பகுதியில், பிரிந்து வாழும் கணவரைக் கூலிப்படையை ஏவி கொடூரமாகத் தாக்கி கால்களை உடைத்த வழக்கில் அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாக்குதல் தொடர்பான அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்த வழக்கில், தற்போது மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவனின் காலை உடைத்த கூலிப்படை நபர், தப்பி ஓடும்போது அதே காலில் விபத்தாகி எலும்பு முறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை அரசுப் பேருந்து ஓட்டுநர்.. ஸ்ரீதேவியின் சாதனைப் பயணமும்.. குவியும் மக்கள் ஆதரவும்!

பின்னணி மற்றும் குடும்பத் தகராறு:

வெங்கம்பாக்கம் பகுதியில் தாமோதரன் என்பவர் தனது மகனுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தா. கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவரை விட்டுப் பிரிந்து சென்ற வசந்தா, வேறொரு நபருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு தாமோதரன் பலமுறை அழைத்தும் வசந்தா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாமோதரனை நேரில் சந்தித்த வசந்தா, தனது மகனைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தாமோதரன் மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வசந்தா, கணவரைப் பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார்.

லட்சங்களில் பேசப்பட்ட வினோத டீல்:

இதற்காகப் பொன்மணி என்ற உள்ளூர் ரவுடியை வசந்தா அணுகியுள்ளார். அப்போது, “அவரது உயிர் எனக்கு முக்கியம், அதனால் அவரைக் கொல்ல வேண்டாம்; ஆனால் அவரது காலை மட்டும் உடைத்து விடுங்கள்” என்று கூறி, கூலிப்படைக்கு லட்சக்கணக்கில் பணம் பேசிக் கொடுத்துள்ளார். அதில் ஒரு பெருந்தொகையை முன்பணமாகவும் கொடுத்துள்ளார்.

திட்டமிட்ட கொடூரத் தாக்குதல்:

திட்டத்தின்படி, தாமோதரனின் வீட்டிற்கு வந்த இரண்டு நபர்கள், “உங்களுக்கு பார்சல் வந்திருக்கிறது” என்று கூறி தாமோதரனை வீட்டின் முன் பகுதிக்கு வரவழைத்துள்ளனர். அவர் வெளியே வந்தவுடன், மறைத்து வைத்திருந்த பேஸ்பால் மட்டையால் தாமோதரனைத் தரதரவென வெளியில் இழுத்துப் போட்டு கொடூரமாகத் தாக்கத் தொடங்கினர்.

அவர்கள் தாமோதரனை நிலைகுலையச் செய்து அவரது கால்களை உடைத்தனர். அப்போது மகனைக் காப்பாற்ற ஓடிவந்த தாமோதரனின் வயதான தாயாரையும் பொருட்படுத்தாமல், அந்த மூதாட்டியைத் தள்ளிவிட்டுவிட்டு தாமோதரனின் கால் மற்றும் முதுகுப் பகுதிகளில் மீண்டும் மீண்டும் கொடூரமாக அடித்துத் துன்புறுத்தினர்.

போலீஸ் விசாரணை மற்றும் கைது:

இந்தக் கொடூரத் தாக்குதல் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. இத்தாக்குதல் குறித்துப் பாதிக்கப்பட்ட தாமோதரன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு, கூலிப்படையை ஏவிய குற்றத்திற்காக தாமோதரனின் மனைவி வசந்தாவைக் கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாகத் தேடினர்.

குற்றவாளிக்கு நேர்ந்த விசித்திர விபரீதம்:

தாமோதரனின் காலை உடைத்துவிட்டு, கூலிப்படை நபர் அகஸ்டின் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாகத் தப்பிச் சென்றார். அப்போது மதுரவாயல் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், தாமோதரனுக்கு எந்தக் காலை அகஸ்டின் உடைத்தாரோ, அதே கால் உடைந்து அவரும் நிலைகுலைய நேரிட்டது.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!

போலீஸ் அதிரடி மற்றும் கைது:

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்களைக் கொண்டு தீர்த்தங்கரணை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், ரவுடி பொன்மணி மற்றும் பரத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கால் முறிவடைந்த அகஸ்டினை உடனடியாகச் சிறையில் அடைக்க முடியாததால், அவர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு, குணம் அடைந்த பிறகு காவல் நிலையத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow Us