AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs SL: இலங்கைக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்.. லிஸ்டில் இந்த முன்னாள் வீரர் முதலிடம்!

IND vs SL Most Sixes in Indian Batsman: இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் பல ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் தங்களின் அதிரடி பேட்டிங்கால் ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளனர். குறிப்பாக சிக்ஸர் அடிப்பதில், சில இந்திய பேட்ஸ்மேன்களின் பெயர்கள் இன்றும் சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த முதல் 5 இந்திய பேட்ஸ்மேன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

IND vs SL: இலங்கைக்கு எதிராக அதிக சிக்ஸர்கள்.. லிஸ்டில் இந்த முன்னாள் வீரர் முதலிடம்!
அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 10 Aug 2026 08:00 AM IST

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு (IND vs SL) இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது வருகின்ற 2026 ஆகஸ்ட் 15ம் தேதி இலங்கையில் உள்ள காலி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி பைனலுக்கு இந்திய அணி (Indian Cricket Team) தகுதி பெற வேண்டுமெனில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், சுப்மன் கில் படை வெற்றி பெறுவது முக்கியமானது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் பல ஜாம்பவான் பேட்ஸ்மேன்கள் தங்களின் அதிரடி பேட்டிங்கால் ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ளனர். குறிப்பாக சிக்ஸர் அடிப்பதில், சில இந்திய பேட்ஸ்மேன்களின் பெயர்கள் இன்றும் சாதனைப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்த முதல் 5 இந்திய பேட்ஸ்மேன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: திரும்பிய சுப்மன் கில்.. சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்திய இந்தியா..!

நவ்ஜோத் சிங் சித்து:

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்களின் பட்டியலில் நவ்ஜோத் சிங் சித்து முதலிடத்தில் உள்ளார். நவ்ஜோத் சிங் சித்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் மொத்தமாக 18 சிக்ஸர்களை அடித்துள்ளார். இதில், 1993-94ம் ஆண்டு லக்னோவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் அடித்த 8 சிக்ஸர்களும் அடங்கும்.

விரேந்தர் சேவாக்:

இந்திய அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கி தனது அதிரடி பேட்டிங்கிற்குப் பெயர் பெற்ற விரேந்தர் சேவாக், இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில், விரேந்தர் சேவாக் 11 போட்டிகளில் 15 சிக்ஸர்களை அடித்துள்ளார். அதேநேரத்தில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரும், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் 10 சிக்ஸர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

4வது இடம் யாருக்கு..?

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில், சௌரவ் கங்குலி, எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 9 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். அதேநேரத்தில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 7 சிக்ஸர்களை அடித்துள்ள ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ALSO READ: கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை.. சிக்ஸர் மழை பொழிந்த சிராஜ்.. இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அப்டேட் செய்யப்பட்ட இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதர், முகமது பர்கர் கிருஷ்ணா, பிரசித்ரர் கிருஷ்ணா, பிரசித்ரர், கிருஷ்ணா, சரண்ஷ் ஜெயின், ஆக்கிப் நபி, சர்ஃபராஸ் கான்

Follow Us