தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்.. தூத்துக்குடியில் மாணவியை 3 பேர் சீரழிக்க முயன்ற கொடூரம்.. நூலிழப்பில் தப்பினார்!
Thoothukudi Crime: தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதை அந்தப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரில் மூவரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகன் சஞ்சய் ( 19 வயது). பெயிண்டர் தொழில் செய்து வரும் இவர், அந்த பகுதியை சேர்ந்த 12- ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்ததாக தெரிகிறது. அதன்படி, அந்த மாணவியும், சஞ்சையும் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும், அவ்வப்போது நேரில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று அந்த மாணவி பெயிண்ட் தொழிலாளி சஞ்சய் உடன் இரு சக்கர வாகனத்தில் ஆத்திக்காடு கருமேனி ஆற்றங்கரை காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு, தன்னுடன் பெயிண்டர் வேலை பார்த்து வரும் நண்பர்களான நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை முருகன் கோவில் தெருவை சேர்ந்த திருமனி மகன் உபேஷ் தர்மா ( 21 வயது), உடன்குடி முத்து நகரை சேர்ந்த சக்திவேல் மகன் முத்தரசன் ( 18 வயது) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு அங்கு வருமாறு சஞ்சய் அழைத்துள்ளார்.
காட்டுப்பகுதியில் 3 இளைஞர்களுடன இருந்த மாணவி
அதன்படி, இருவரும் தங்களது இரு சக்கர வாகனத்தில் ஆத்திக்காடு கருமேனி ஆற்றங்கரை காற்று பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு, மூன்று இளைஞர்களுடன் ஒரு பள்ளி மாணவி தனியாக இருப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனே, அவர்கள் 4 பேரையும் அந்த பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூன்று இளைஞர்கள் மற்றும் அந்த மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: அம்மா உணவக இட்லி திருட்டுத்தனமாக விற்பனை.. இரு ஊழியர்கள் பதவி காலி.. நெல்லை நகராட்சி இயக்குநர் அதிரடி!




மாணவியை 3 இளைஞர்கள் கூட்டு வன்கொடுமை செய்ய திட்டம்
இதில், காட்டுப்பகுதியில் மாணவியை அழைத்து சென்று அவரது காதலன் சஞ்சய் உல்லாசமாக இருக்க முயன்றதும், தனது நண்பர்கள் இருவருக்கு அந்த மாணவியை விருந்தாக்க முயன்றதும் தெரிய வந்தது. இதை கேட்டு போலீசாரும், கிராம மக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பொதுமக்கள் முன்கூட்டியே பார்த்த காரணத்தால் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் முன்னதாகவே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, மாணவி உள்பட 4 பேரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
3 இளைஞர்களும் போக்ஸோ சட்டத்தில் கைது
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில், சஞ்சய், முத்தரசன், உபேஷ் தர்மா ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!