AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த ஷாக் உத்தரவு!

Armstrong Murder Case: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் 4 குற்றவாளிகள் தங்களுக்கும் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த ஷாக் உத்தரவு!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீன் தள்ளுபடி
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Jun 2026 06:59 AM IST

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவராக இருந்து வந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர், கடந்த 2024- ஆம் ஆண்டு ஜூலை 5- ஆம் தேதி அவரது வீட்டின் அருகே நடைபெற்று வரும் கட்டிடப் பணிகளை பார்க்க சென்ற போது ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து பொன்னை பாலு, ஹரிஹரன் உள்பட 30 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் பலர் ஜாமீன் பெற்று வெளியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பொன்னை பாலு, ஹரிஹரன், மணிவண்ணன், சந்தோஷ் ஆகியோர் தங்களுக்கும் ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவானது நீதிபதி குமரப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் சுமார் 2 ஆண்டுகளாக மனுதாரர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை

இந்த வழக்கை போலீசார் விசாரித்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து விட்டனர். இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்த உயர் நீதிமன்றம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லை. எனவே, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதம் முன் வைக்கப்பட்டது.இந்த வாதத்தை கேட்ட நீதிபதி குமரப்பன் போலீசாரின் எதிர் தரப்பு வாதத்தை கேட்டார்.

மேலும் படிக்க : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!

ஜாமீனுக்கு எதிரான வழக்கு நிலுவை

அப்போது, காவலர்கள் தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதத்தை முன் வைத்தனர். தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்தும், இந்த வழக்கில் கைதான நபர்களுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்தும் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன.

ஜாமீன் வழங்க மறுப்பு – மனுக்கள் தள்ளுபடி

எனவே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதி குமரன், அவர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட மனுதாரர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுக்களை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!

Follow Us