AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடியில் பயங்கரம்.. வடமாநில தொழிலாளி கொடூரமாக அடித்து கொலை.. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

Thoothukudi Worker Murder: தூத்துக்குடி மாவட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலிலில் ஒரு தொழிலாளியை கட்டையால் கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் பயங்கரம்.. வடமாநில தொழிலாளி கொடூரமாக அடித்து கொலை.. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Jun 2026 12:10 PM IST

தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆலைகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் வெளி மாநில தொழிலாளர்கள் இரவு பணி முடிந்து தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலை 3- ஆம் மயில் பகுதியில் உள்ள ஒரு உணவகம் அருகே செயல்பட்டு வரும் மது கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது, அவர்கள் இடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் அங்கு கிடந்த கட்டையால் சுமார் 27 வயது மதிக்கத்தக்க வெளி மாநில தொழிலாளியை கடுமையாக தாக்கத் தொடங்கினர்.

பலத்த காயமடைந்த வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

இந்த தாக்குதலில் அந்த இளைஞருக்கு தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் துடிக்க துடிக்க அந்த நபர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் தென்பாகம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், காவல் ஆய்வாளர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்.

மேலும் படிக்கச : பண மோசடி புகார்.. திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மகன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!

கைதான நபர்களிடம் போலீசார் விசாரணை

அங்கு, கொலை செய்யப்பட்டு கிடந்த வெளி மாநில தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களின் ஒருவர் தென்பாகம் போலீஸாரால் முதலில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரையும் தொடர்ந்து தேடி வந்த நிலையில் அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் குறித்து விசாரணை

இதனிடையே, கொலை செய்யப்பட்ட நபர் யார், அவரது பெயர் என்ன, அவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பன உள்ளிட்ட பல்வேற தகவல்களை போலீசார் திரட்டி வருகின்றனர். தூத்துக்குடியில் வெளிமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலில் ஒரு தொழிலாளியை கட்டையால் தாக்கி அடித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவைக்கு 6 மாற்று தலைவர்கள் நியமனம்.. எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு.. ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

Follow Us