AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ரீல்ஸ்.. அரைக்கால் டவுசருடன் இளைஞர் அட்ராசிட்டி.. அதிர்ச்சியில் அரசு அலுவலகம்!

Trichy Collector Office Viral Reel : திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் கருப்பு நிற டீ சரட் மற்றும் கருப்பு நிற அரைக்கால் டவுசருடன் ஒரு இளைஞர் எடுத்த ரீல்ஸ் சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் ரீல்ஸ்.. அரைக்கால் டவுசருடன் இளைஞர் அட்ராசிட்டி.. அதிர்ச்சியில் அரசு அலுவலகம்!
ஆட்சியர் அலுவலகத்தில் அரைக்கால் சட்டையுடன் ரீல்ஸ்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 20 Jun 2026 11:09 AM IST

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒரு ரிலீஸ் வைரலாகி வருகிறது. அந்த ரீல்ஸில் கருப்பு நிற டீ ஷர்ட், அரைக்கால் டவுசர் அணிந்த இளைஞர் ஒருவர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில், அதுவும் ஆட்சியர் அறையில் நடந்து வருவது போலவும், அங்கிருக்கும் சொகுசு சேரில் உட்கார்ந்து சுற்றுவது போலவும் பின்னணி இசையுடன் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருக்கும் நபர் வெளி மாநிலத்தை சேர்ந்தவர் போல இருக்கிறார். இந்த ரீல்ஸ் ஆனது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் எப்படி எடுக்கப்பட்டது. அதுவும் ஆட்சியர் அறையில் இவ்வளவு சகஜமான முறையில் ரீல்ஸ் எடுத்தது எப்படி என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், அந்த ரீல்ஸ் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது போலவும், ஆட்சியர் அறையின் உள்ளே அலங்கார மின் விளக்குகள் எரிவதும் அந்த ரீல்ஸ் வீடியோவில் பதிவாகி உள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு சென்ற விவகாரம்

இதனால், யார் அந்த இளைஞர். அவர் எவ்வாறு ஆட்சியில் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்தார். அதுவும் ஆட்சியர் அலுவலக நாற்காலியில் அமர்ந்து ரீல்ஸ் எடுத்தது எப்படி என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளர். இது தொடர்பான தகவல் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் கவனத்துக்கு சென்றது. இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலக ஊழியர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். இதில், கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆட்சியர் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: தமிழக சட்டப்பேரவைக்கு 6 மாற்று தலைவர்கள் நியமனம்.. எதிர்க்கட்சியினருக்கு வாய்ப்பு.. ஜே.சி.டி பிரபாகர் அறிவிப்பு!

ஆட்சியர் பிரதீக் தயாள் விளக்கம்

அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள் அளித்த விளக்கத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆட்சியர் அலுவலகத்தின் முக்கியத்துவத்தை உணராமல் இந்த வீடியோவை எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

ஆட்சியர் பிறப்பித்த அதிரடி உத்தரவு

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் எந்த அதிகாரிகள் கண்காணிப்பும் இன்றி நடைபெறுகிறதா. வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் எந்த பாதுகாப்பு கெடுபிடிகளும் இன்றி பணிபுரிந்து வருகிறார்களா என்றும் பலதரப்பட்ட மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு.. குற்றவாளிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த ஷாக் உத்தரவு!

Follow Us