மதுரை – சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி!
TN IAS Officers Transferred : தமிழகத்தில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உள்பட பிற துறைகளில் பணி புரிந்து வந்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கூடுதல் தலைமை செயலாளர் பிறப்பித்து உள்ளார் .
தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில் அரசு துறைகளில் உள்ள உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் உட்பட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சாய் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இதில் டி. பிரபு சங்கர் ஐ. ஏ. எஸ்., வி. பி. ஜெயசீலன் ஐ. ஏ. எஸ்., பி. ஆகாஷ் ஐ. ஏ. எஸ்., நிஷாந்த் கிருஷ்ணா ஐ. ஏ. எஸ் மற்றும் என். பொன்மணி ஐ. ஏ. எஸ். ஆகியோரின் பணியிட மாற்றங்கள் மற்றும் நியமனங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே. இன்னசென்ட் திவ்யா ஐ. ஏ. எஸ். தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் ( கோ- ஆப்டெக்ஸ்) இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். கவிதா ராமு ஐ. ஏ. எஸ். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு அபிவிருத்தி கழகத்தின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பெருநகர போக்குவரத்து கழகம்
டி. மோகன் ஐ. ஏ. எஸ். பெருநகர போக்குவரத்து கழகத்தின் பயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்பட்டன. ஸ்ரேயா பி. சிங் ஐ. ஏ .எஸ். பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பி. ரமணவதி சரஸ்வதி ஐ. ஏ. எஸ். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட அபிவிருத்தி வாரியத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் சேவைகள் ஒப்படைக்கப்பட்டன. இதே போல, மதுரை மாவட்ட ஆட்சியரான பி. ஆகாஷ் ஐஏஎஸ் சிவகங்கை மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: பண மோசடி புகார்.. திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி மகன் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு!




மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்
சிவகங்கை மாவட்டத்தில் ஆட்சித் தலைவராக இருந்த நிஷாந்த் கிருஷ்ணா மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரி இணை ஆணையராக இருந்த பொன்மணி ஐ. ஏ. எஸ் .திருச்சிராப்பள்ளி இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து அரசு துறைகளில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அரசு துறைகளில் தொடர் பணியிட மாற்றம்
இதில், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, தற்போது மதுரை மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அரசு துறைகளில் பணிபுரிந்து வந்த ஐ. ஏ. எஸ். அதிகாரிகளும் இந்த பணியிட மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை.. தமிழக பாஜகவில் அதிரடி மாற்றம்? டெல்லி போடும் மெகா பிளான்!