AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“ஜென்சி தலைமுறையினருக்கு மேதாது பிரச்சனை பற்றிய புரிதல் இல்லை”.. அன்புமணி ராமதாஸ் சொன்ன வார்த்தை!!

கர்நாடக அரசு இதுவரை காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையோ ஒருமுறை கூட மதித்தது கிடையாது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து, தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

“ஜென்சி தலைமுறையினருக்கு மேதாது பிரச்சனை பற்றிய புரிதல் இல்லை”.. அன்புமணி ராமதாஸ் சொன்ன வார்த்தை!!
அன்புமணி ராமதாஸ்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 20 Jun 2026 06:42 AM IST

சென்னை, ஜுன் 20: தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில், “மேகதாது அணை மற்றும் பயிர்க்கடன் தள்ளுபடி” உள்ளிட்ட விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து சென்னையில் நடைபெற்ற அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையேற்று நடத்தினார். அப்போது, தற்போதைய ‘ஜென்ஸி’ (GenZ) தலைமுறை இளைஞர்கள் சிலருக்கு மேகதாது அணைப் பிரச்சனை குறித்த போதிய புரிதல் இல்லை என அன்புமணி கவலை தெரிவித்துள்ளார். அணை கட்டினால் நல்லதுதானே, ஏன் எதிர்க்கிறார்கள்?” என்று அவர்கள் கேட்கிறார்கள்.

இதையும் படிக்க : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!

ஆனால், கர்நாடக அரசு இதுவரை காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பையோ அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையோ ஒருமுறை கூட மதித்தது கிடையாது என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேகதாது அணை விவகாரமும் ஜென்ஸி இளைஞர்களும்:

கடலில் உபரி நீர் வீணாகக் கலப்பதாக கர்நாடகத் தரப்பில் கூறப்படும் கணக்குகள் அனைத்தும் மழைக்காலங்களில் மட்டுமே நடப்பவை. காவிரி நடுவர் மன்றம் வழங்கிய மாதவாரி தண்ணீர் பங்கீட்டு அட்டவணையை கர்நாடகா ஒருபோதும் பின்பற்றியதில்லை. அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி, தண்ணீரைச் சேமிக்க முடியாத சூழல் ஏற்படும்போது மட்டுமே தமிழகத்திற்குத் தண்ணீரைத் திறந்துவிட்டு, கணக்குக் காட்டுகிறார்கள். அந்த மழைக்காலத்தில் தமிழகத்திற்கும் தண்ணீர் தேவைப்படாததால், அது கடலுக்குச் சென்றுவிடுகிறது. இந்த யதார்த்தத்தை இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

விவசாயக் கடன் தள்ளுபடி குறித்த வலியுறுத்தல்:

தமிழகத்தில் விவசாயிகள் கடும் நஷ்டத்தைச் சந்தித்து, தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, முதலமைச்சர் விஜய் அவர்கள் தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியின்படி விவசாயக் கடன்களை உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் கடன்களை முழுமையாகவும், அதற்கு மேல் நிலம் வைத்துள்ள குறிப்பிட்ட விழுக்காடு விவசாயிகளின் கடன்களில் பாதியையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!

மகாராஷ்டிராவில் லட்சக்கணக்கான விவசாயிகளின் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் வரையிலான தேசிய வங்கித் தலைப்பிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசு நிதி கணக்குகளைப் பார்க்காமல் கஷ்டப்படும் விவசாயிகளுக்கு உடனே உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Follow Us