கோவில் நிதியில் 29 திருமண மண்டபகங்கள், 17 வணிக வளாகங்கள் – கட்டுமான பணிகள் திடீர் ரத்து – என்ன காரணம்?
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியான அறிவிப்பில், திருக்கோயில்களின் நிதிச்சுமையினை கருத்திற் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாத ரூ. 246 கோடி மதிப்பீட்டிலான திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்படுவதகா அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 19 : கோவில்களின் நிதியில் திருமண மண்டபகங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகள் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் 17 வணிக வளாகங்கள் மற்றும் 29 திருமண மண்டபங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி சுமையினை கருத்தில் கொண்டு தற்போது தற்போது ரூ.245.85 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 46 பணிகளை இந்து அறநிலையத்துறை ரத்து செய்துள்ளது.
கோவில் நிதியில் பிற கட்டுமான பணிகள் ரத்து
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியான அறிவிப்பில், திருக்கோயில்களின் நிதிச்சுமையினை கருத்திற் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாத ரூ. 246 கோடி மதிப்பீட்டிலான திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்படுகிறது.




இதையும் படிக்க : தமிழகத்தில் மீண்டும் நீட் பலி.. சேலத்தில் 19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு.. கலைந்தது டாக்டர் கனவு!
இந்து சமய அறநிலையத்துறையினால் திருமணமண்டபங்கள். வணிகவளாகங்கள் கட்ட வெளியிடப்பட்ட அறிவிப்புகள் நீதிமன்ற தடையாணை காரணமாகவும், திருக்கோயில்களின் நிதிச்சுமையினை கருத்திற்கொண்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தொடங்கப்படாத நிலையில் இருந்த ரூபாய் 115 கோடியே 77 இலட்சம் மதிப்பீட்டிலான 29 திருமண மண்டபங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூபாய் 130 கோடியே 8 இலட்சம் மதிப்பீட்டிலான 17 வணிக வளாகங்கள் கட்டும் பணிகள் என ஆக மொத்தம் ரூ. 245.85 கோடி மதிப்பீட்டிலான 46 பணிகளுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிதியினை கொண்டு கோயில்கள் மற்றும் பக்தர்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையின் அறிவிப்பு
திருக்கோயில்களின் நிதிச்சுமையினை கருத்திற் கொண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டு தொடங்கப்படாத ரூ.246 கோடி மதிப்பீட்டிலான திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கான நிர்வாக அனுமதிகள் ரத்து. @CMOTamilnadu @RameshOffcl @TNDIPRNEWS #tnhrce #CMJosephVijay #tndipr pic.twitter.com/HIr2ZsSo8V
— TN HRCE (@tnhrcedept) June 19, 2026
முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை வருமானம் கோவிலுக்கே என்ற அறிவிப்பு ஆளுநர் உரையில் அரசின் கொள்கையாக வாசிக்கப்பட்டது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், கோவில் சொத்துக்கள் அனைத்தும் அதன் புனிதமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்துவது இந்த அரசால் உறுதி செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். மக்களின் காணிக்கை மற்றும் அரசின் உதவிகளோடுதான் கோவில்கள் நிர்வகிக்கப்படுகின்றன. கோவில்களின் சார்பாக பல கல்வி நிலையங்கள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இதையும் படிக்க : காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!
இதுகுறித்து ஏற்கனவே பலரும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ள நிலையில், கல்வி போன்ற நோக்கங்களும் புனிதமான நோக்கத்தின் பகுதியாக இருக்கும் என்று வெளிப்படையாக அறிவிப்பது மிகவும் அவசியமாகும். அத்துடன் கோவில் நிலங்களில் குடியிருப்போர், சாகுபடி செய்து வருபவர்களின் நலன்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.