AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – 2 பேர் பலி

பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 10க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னை அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு  – 2 பேர் பலி
அம்மோனியா வாயு கசிவு
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 21 Jun 2026 19:54 PM IST

சென்னை, ஜூன் 21 : பெரியபாளையம் அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் பரவிய நிலையில்  2 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் அருண் ராஜ் விளக்கமளித்துள்ளார்.  மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள 10க்கும் மேற்பட்டோர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் 21 , 2026 இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து வந்தபோது திடீரென அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அரசுப் பள்ளியில் புகுந்து இடையூறு.. ‘ரீல்ஸ்’ போட்ட தவெக நிர்வாகி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

வாயுவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரம்

 

இந்த நிலையில் 45க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அமோனியா வாயு கசிவால் மயக்கமடைந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்கப்பட்டு மஞ்சங்கரணை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மயக்கமடைந்தவர்களில் சிலருக்கு வாய் மற்றும் மூக்கிலும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.  அதில் 6 தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 2 பேர் உயிரிழந்தனர். தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் சிலர் சிகிச்சைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் இரங்கல்

இது தொடர்பாக தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் ஆறுதல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட பதிவில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள கன்னிகைப்பையர் கிராமத்தில் அமைந்துள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த துயரமான அம்மோனியா வாயு கசிவு விபத்தில், விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோனதும், பல தொழிலாளர்கள் காயமடைந்ததும் எனக்கு ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கடினமான சூழலில் அவர்களுக்குத் தேவையான மனவலிமையும் தைரியமும் கிடைக்க நான் பிரார்த்திக்கிறேன். மேலும், சிகிச்சையில் உள்ள அனைவரும் விரைவில் குணமடைந்து முழு உடல்நலம் பெறவும் நான் பிரார்த்திக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தூத்துக்குடி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்

இந்த அவசர நிலை குறித்து அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையின் தலைமையகத்திற்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் , வாயுவைக் கண்டறியும் கருவிகள் மற்றும் சிறப்பு மீட்புக் கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  இதற்கிடையில் அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு வேல்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து அமைச்சர் குமார் ஆறுதல் கூறினார்.

 

 

Follow Us