AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசுப் பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்… மாணவர்கள் கல்வியை பாதிக்கும் செயலை ஏற்க முடியாது.. அண்ணாமலை கண்டனம்!

TVK Members Reels: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளியில் தமிழக வெற்றிக் கழகத்தினர் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் புகைப்படத்தை மாட்டி ரீல்ஸ் வெளியிட்ட செயலை வீ த லீடர் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்… மாணவர்கள் கல்வியை பாதிக்கும் செயலை ஏற்க முடியாது.. அண்ணாமலை கண்டனம்!
அரசு பள்ளியில் தவெகவினர் ரீல்ஸ்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 20 Jun 2026 12:49 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 20- க்கும் மேற்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் சென்று வகுப்பறையில் தவெகவின் தலைவரும், முதல் அமைச்சருமான ஜோசப் விஜய் படத்தை சுவரில் மாட்டி ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த ரீல்ஸ் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், இதற்கு பல்வேறு தரப்பட்ட மக்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதே போல, அரசியல் கட்சிகளின் தலைவர்களும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வீ த லீடர்ஸ் அமைப்பை தொடங்கிய அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சிலர் வகுப்பறையின் உள்ளே முதல்வர் ஜோசப் விஜயின் படத்தை சுவரில் மாட்டி உள்ளனர்.

அரசு பள்ளி பெருமையை மீட்டெடுக்கும் பணி

இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் ரீல்ஸ் ஆக பரப்பி உள்ளனர். கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கு சரியான கட்டடங்கள் கட்டித் தரப்படாமல் பழைய கட்டிடங்கள் அனைத்தும் தரம் இழந்து உள்ள நிலையில், தற்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு அவற்றின் பெருமையை மீட்டு எடுக்கும் மிகப்பெரும் பணி அவரின் முன்னால் இருக்கிறது. ஆனால், தமிழக வெற்றிக் கழக கட்சியினரின் இது போன்ற செயல்பாடுகள், அரசு பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருந்து வருகிறது.

மேலும் படிக்க: சட்டம் – ஒழுங்கு குறித்து முதல்வர் விஜய் பேரவையில் பேசுவாரா? பிரேமலதா விஜயகாந்த் கேள்வி!

மாணவரின் கல்வி பாதிப்பதை முதல்வர் விஜய்யே ஏற்கமாட்டார்

தமிழகத்தில் ஆளும் தவெக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதற்காக அரசு பள்ளிகளுக்கு சென்று மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையிலும், தொந்தரவு செய்யும் வகையிலும் செயல்படுவதை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ஏற்றுக் கொள்ள மாட்டார் என்று நம்புகிறோம். எனவே, தமிழகத்தில் மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு தங்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தும் படி முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யை கேட்டுக் கொள்கிறோம்.

சமூகவலைதளத்தில் வைரலான ரீல்ஸ்

அத்துடன், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ் மோகனையும் வலியுறுத்துகிறோம் என்று அந்த பதிவில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அரசு பள்ளியின் வகுப்பறையில் தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்கள் முதல் அமைச்சர் ஜோசப் விஜயின் படத்தை சுவரில் மாட்டி எடுக்கப்பட்ட ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள்.. மு.க.ஸ்டாலின் வாழ்த்தில் மிஸ்- ஆன அந்த வார்த்தை!

Follow Us