கரூர் மரணங்களுக்கு என் மீது பழி போட்டனர் – முதல்வர் விஜய் பரபரப்பு பேச்சு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான ஜூன் 23, 2026 இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது திரைப்படங்களில் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி பற்றி பேசியதாக அவர் தெரிவித்தார்.
சென்னை, ஜூன் 23 : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான ஜூன் 23, 2026 இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய அவர், எதிர்த்து பேசினால் தான் எதிர்கட்சி என்று நிரூபிக்க முடியும் என நினைத்துப் பேசிய எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு வணக்கமும் நன்றியும் என்றார்.
திரைப்படங்களில் அரசியல்
மேலும் பேசிய அவர், கடந்த 1990களில் ரசிகர் மன்றமாக இருந்தபோதே மக்களுக்கு துணையாக நின்றோம். நான் நடித்த திரைப்படங்களின் மூலம் ஊழல் எதிர்ப்பு, சமூகநீதி, கல்வி பற்றி பேசினேன். அரசியல் பேசியதாலேயே நமது படங்கள் சந்தித்த, இதுவரை சந்தித்த பிரச்னைகள் அனைவருக்கும் தெரியும். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியவுடனேயே சிஏஏ திட்டத்தை எதிர்த்து அறிக்கை கொடுத்தோம் என்றார்.




இதையும் படிக்க : மொஹரம் பண்டிகை தொடர் விடுமுறை – சிறப்பு பேருந்துகளை அறிவித்த தமிழ்நாடு அரசு
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேச்சு
Tamil Nadu Chief Minister C Joseph Vijay says, “Periyar’s rejection of religious belief is not something we accepted, but we fully embraced his broader principles. We have always made it clear that we are not opposed to anyone’s ideology. We accepted Dr Ambedkar’s ideals of equal… https://t.co/IZijdq6Pso pic.twitter.com/44WBJ6ygVf
— ANI (@ANI) June 23, 2026
மேலும் பேசிய அவர், பெரியார் சொன்னதில் நமக்கு ஏற்புடையதை மட்டும் எடுத்துக்கொண்டோம். பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையில் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படையாக அறிவித்தோம். தவெகவுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதையும் வெளிப்படையாக அறிவித்தோம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதை கொள்கையாக அறிவித்துதான் அரசியலுக்கே வந்தோம் கொள்கை எதிரி, அரசியல் எதிரி யார் என்பதை வெளிப்படையாக அறிவித்தோம் என்றார்.
இதையும் படிக்க : சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்
கரூர் விவகாரம் குறித்து முதல்வர் பேச்சு
மேலும் பேசிய அவர், நான் அப்படியே ஷூட்டிங்கில் இருந்து நேராக வந்து முதல்வரானதுபோல் சிலர் பேசுகின்றனர். என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் அல்ல. மக்களின் அன்பும், அரவணைப்பும்தான் காரணம் என்றார். மேலும் பேசிய அவர், கரூர் விவகாரத்தில் 41 பேர் உயிரிழந்தது பெரும் வேதனையளிக்கிறது. அது என்றும் மாறாது. கரூர் மரணங்களுக்கு என் மீது பழி போட்டனர். அதை என்னவென்றே சொல்வது என தெரியவில்லை என்று பேசினார்.