சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி… முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்
ஜெகதீஷ் பழனிசாமி முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 22, 2026 நேற்று ஜெகதீஷ் தனது வாழ்த்து செய்தியில் இதனை உறுதி செய்திருக்கிறார். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன், 23 : முதல்வர் விஜய் நடிகராக இருந்தபோது அவரது மேனேஜராக செயல்பட்டவர் ஜெகதீஷ் பழனிசாமி. இவர் தீ ரூட் என்ற பெயரில் நடிகர்களுக்கான மேனேஜ்மென்ட் நிறுவனத்தையும் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் விஜய் முதல்வராக பதவியேற்ற நிலையில் அவருடன் ஜெகதீஷ் பயணித்தது பேசுபொருளானது. குறிப்பாக அரசு ரீதியான பயணங்களின் போது முதல்வர் விஜய்யுடன் ஜெகதீஷ் பயணித்தது சர்ச்சையானது. விஜய்யின் மேனேஜர் அரசு சார்ந்த நிகழ்வுகளில் இடம் பெற்றதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்தனர்.
முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக ஜெகதீஷ் பழனிசாமி நியமனம்
இந்த நிலையில் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜெகதீஷ் பழனிசாமி முதல்வர் விஜய்யின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அவரே அறிவித்திருக்கிறார். முதல்வர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் 22, 2026 நேற்று ஜெகதீஷ் தனது வாழ்த்து செய்தியில் இதனை உறுதி செய்திருக்கிறார். இதன் மூலம் கடந்த மே 12, 2026 அன்றே அவர் முதல்வரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது உறுதியாகியிருக்கிறது.




இதையும் படிக்க : பாஜக கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகல்… ஜான்பாண்டியன் எடுத்த திடீர் முடிவு!
ஜெகதீஷின் பதிவு
18 years ago, I stood in line as a die-hard fan, hoping for a photo with you. Now, Standing beside you as “The Private Secretary to the Hon’ble Chief Minister” of the State. Life has come full circle ❤️ I owe you everything for who I am today.
Doesn’t matter how low I feel,… pic.twitter.com/jWRHMRvlAU
— Jagadish (@Jagadishbliss) June 22, 2026
இது தொடர்பாக ஜெகதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், 18 ஆண்டுகளுக்கு முன்பு, உங்களுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், ஒரு தீவிர ரசிகனாக வரிசையில் நின்றேன். இப்போது, தமிழ்நாடு முதல்வரின் தனிச் செயலாளராக உங்கள் அருகில் நிற்கிறேன். வாழ்க்கை ஒரு முழு வட்டத்தை நிறைவு செய்துள்ளது. நான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு நீங்கள் தான் காரணம்.
இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ பல்லவி ஆண் குழந்தைக்கு “டிவிகே” என பெயர்… முதல்வர் ஜோசப் விஜய் சூட்டினார்!
நான் எவ்வளவு குறைவாக உணர்ந்தாலும், உங்கள் மாசற்ற ஆளுமைமிக்க புன்னகையால் எல்லாவற்றையும் எனக்கு சாதகமாக மாற்றிவிடுவீர்கள். என் கடினமான நாட்களில் நான் வேகமாக ஓடுவதற்கு நீங்கள் கொடுத்த ஆற்றலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் கடவுள் தளபதிவிஜய் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தமிழக மக்களுடன் நீங்கள் மேலும் உயரங்களை அடையவும், ஒரு புகழ்பெற்ற பயணத்தை மேற்கொள்ளவும் வாழ்த்துகிறேன் என்ற குறிப்பிட்டுள்ளார்.