AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காவல்துறையில் தொடரும் அதிரடி… தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Ips Officers Transfer : தமிழகத்தில் 14 ஐ. பி. எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதில், எந்தெந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

காவல்துறையில் தொடரும் அதிரடி… தமிழகத்தில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 22 Jun 2026 19:16 PM IST

தமிழகத்தில் காவல்துறையில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்து வரும் உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது காவல்துறையில் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே. மணிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அதிகாரிகளில் கீழ்காணும் 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,

மேலும் படிக்க: “விமர்சனங்களை நிறுத்துங்கள்.. கொள்கை ரீதியாக விவாதிக்க வாருங்கள்!”.. மேயர் பிரியாவுக்கு அமைச்சர் கீர்த்தனா சவால்!!

  • மதுரை மாவட்ட காவல் ஆணையராக எஸ். ராஜேந்திரன் ஐபிஎஸ்.
  • திருப்பூர் மாவட்ட காவல் ஆணையராக எஸ். ராஜேஸ்வரி ஐபிஎஸ்.
  • சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக அனில் குமார் கிரி.
  • சேலம் மாநகர காவல் ஆணையராக ஜோஷி நிர்மல் குமார் ஐபிஎஸ்.
  • சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜி- ஆக கார்த்திகேயன்.
  • சென்னை ஊழல் தடுப்பு கண்காணிப்பு இயக்க சிறப்பு விசாரணை பிரிவு ஐஜியாக ஆயுஷ் மணி திவாரி.
  • டிஜிபி அலுவலக நிர்வாக பணி அமைப்பு பிரிவு ஐ.ஜி. ஆக ஏ.டி. துரை குமார்.
  • சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி. ஆக கார்த்திகேயன்.
  • சென்னை பெருநகர காவல் போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையராக பி. சாமுண்டீஸ்வரி.
  • சென்னை பெருநகர காவல் தலைமையாக கூடுதல் ஆணையராக ஏ. ஜி. பாபு.
  • சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக பி. சி. தேன்மொழி.
  • ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்க சிறப்பு விசாரணை பிரிவு ஐ.ஜி. ஆக சி. மகேஸ்வரி.
  • சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையராக (சட்டம் – ஒழுங்கு வடக்கு) கபில் குமார்.
  • கடலோர பாதுகாப்பு குழு ஐ.ஜி. ஆக பிரவேஷ் குமார் ஐபிஎஸ் ஆகிய 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில், கடந்த திமுக ஆட்சியில் இருந்த தலைமை செயலாளர், முதல்வரின் தனிச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள், தமிழக சட்டம் – ஒழுங்கு டிஜிபி, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்குனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருந்து வரும் உயர் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், காவல்துறையில் ஏராளமான ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போதும், இந்த பணியிட மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தூத்துக்குடியை மிரட்டிய ‘மினி டொர்னடோ’.. உருவானது எப்படி?.. விளக்கும் வானிலை மையம்!

Follow Us