AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தூத்துக்குடியை மிரட்டிய ‘மினி டொர்னடோ’.. உருவானது எப்படி?.. விளக்கும் வானிலை மையம்!

தூத்துக்குடி - திருநெல்வேலி நாற்கரச் சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே இந்தச் சுழல்காற்று திடீரென உருவானது. இதன் அதீத வேகம் காரணமாக வாகைக்குளம் சுங்கச்சாவடியின் ராட்சத இரும்பு மேற்கூரைகள் மற்றும் தடுப்புகள் அடியோடு பெயர்க்கப்பட்டு, காற்றில் காகிதம் போலப் பறந்து சென்று விழுந்தன.

தூத்துக்குடியை மிரட்டிய ‘மினி டொர்னடோ’.. உருவானது எப்படி?.. விளக்கும் வானிலை மையம்!
தூத்துக்குடியை மிரட்டிய 'மினி டொர்னடோ'
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 22 Jun 2026 08:47 AM IST

தூத்துக்குடி, ஜுன் 22: தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரெனப் பயங்கரமான புனல் வடிவ சுழல்காற்று வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வீசும் ‘டொர்னடோ’ புயல் போன்ற தோற்றத்துடன் விண்ணை முட்டும் அளவிற்கு எழுந்த இந்தச் சுழல்காற்றின் பின்னணியில் உள்ள வானிலை மாற்றங்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் விரிவாக விளக்கியுள்ளது.

இதையும் படிக்க : சென்னை அருகே தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – 2 பேர் பலி

சுங்கச்சாவடி மற்றும் தீம் பார்க் முற்றிலுமாகச் சேதம்

தூத்துக்குடி – திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் உள்ள வாகைக்குளம் சுங்கச்சாவடி அருகே இந்தச் சுழல்காற்று திடீரென உருவானது. இதன் அதீத வேகம் காரணமாக வாகைக்குளம் சுங்கச்சாவடியின் ராட்சத இரும்பு மேற்கூரைகள் மற்றும் தடுப்புகள் அடியோடு பெயர்க்கப்பட்டு, காற்றில் காகிதம் போலப் பறந்து சென்று விழுந்தன. இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது.

மேலும், சுங்கச்சாவடியின் அருகாமையில் அமைந்துள்ள ‘ஏடிஎஸ் க்ராண்ட் வேர்ல்டு’ என்ற தீம் பார்க்கிற்குள் இந்தச் சுழல்காற்று புகுந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்சத விளையாட்டு உபகரணங்கள், கடைகள் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொழுதுபோக்கு கட்டமைப்புகள் இந்தச் சூறாவளியில் சிக்கித் தரைமட்டமாகின. அதிர்ஷ்டவசமாகப் பொதுமக்கள் யாரும் இதில் சிக்கிப் பெரிய அளவில் காயமடையவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயங்கர காட்சியின் வீடியோக்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

‘மினி டொர்னடோ’ உருவானது எப்படி?

இது போன்ற சுழல்காற்று தமிழ்நாட்டில் மிகவும் அரிதானது என்பதால் பொதுமக்கள் மத்தியில் நிலவிய அச்சத்தைப் போக்க, வானிலை ஆய்வு மையம் இதற்கான விரிவான அறிவியல் காரணத்தை வெளியிட்டுள்ளது. தென் தமிழகப் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு மாறுபாடுகள் காரணமாக, தூத்துக்குடியின் வான்பரப்பில் திடீரென அதிவேகமாக வளரக்கூடிய ‘குமுலோநிம்பஸ்’ (Cumulonimbus) எனப்படும் அடர்ந்த இடிமேகங்கள் உருவாயின.

தரைப்பகுதியில் நிலவிய அதிகப்படியான வெப்பச்சலனம் மற்றும் வறண்ட சூழல் காரணமாக, காற்றில் மிக பலத்த மேல்நோக்கிய காற்றோட்டம் திடீரென உருவானது. இந்த மேல்நோக்கிய காற்று வளிமண்டல மேகங்களை நோக்கிச் செங்குத்தாகச் சுழன்றடித்த போது, தரையில் இருந்த டன் கணக்கிலான தூசிகள், மணல் மற்றும் குப்பைகளைத் தன்னுள் இழுத்துக் கொண்டு புனல் வடிவில் காட்சியளித்தது.

இதையும் படிக்க: முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்றதற்கான காரணம் இதுதான், ஆதாரம் உள்ளது – அமைச்சர் கீர்த்தனா பரபரப்பு பேட்டி

‘டஸ்ட் டெவில்’ மற்றும் ‘லேண்ட்ஸ்பவுட்’

வானிலை ஆய்வாளர்களின்படி, இது அமெரிக்காவின் தீவிர சூறாவளி போன்ற உலகளாவிய பேரழிவு காரணி அல்ல. இது உள்ளூர் வெப்ப மாறுபாடுகளால் சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கக்கூடிய ‘லேண்ட்ஸ்பவுட்’ அல்லது ‘டஸ்ட் டெவில்’ எனப்படும் தற்காலிகத் தூசிச் சூறாவளியாகும். வறண்ட தரைப்பரப்பும், திடீர் இடிமேகக் கூட்டமும் ஒரே நேரத்தில் இணையும் போது இத்தகைய அரிய வானிலை நிகழ்வுகள் ஏற்படுகின்றன என்று வானிலை ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.

Follow Us