காங்கிரஸ் தலைவர் பதவியே வேண்டாம்.. தீர்க்கமான முடிவில் செல்வப்பெருந்தகை.. முழு விவரம் என்ன!
Congress Leader Selvaperunthagai : தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது உறுதி என்றும் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் தொடர்பாக விரைவில் மனம் விட்டு பேசுவேன் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது காங்கிரஸ் கட்சியில் புயலை கிளப்பி உள்ளது .
புதுடெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப் பெருந்தகை சந்தித்திருந்தார். இது தொடர்பாக, சென்னை விமான நிலையத்தில் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவை திடீரென சந்திக்கவில்லை. எப்போதும் போல சந்தித்து பேசி இருந்தேன். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே அவரிடம் கூறியிருந்தேன். தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்வதில் எனக்கு விருப்பமில்லை. எனவே, கட்சியை சேர்ந்த வேறு ஒரு நபர் அந்த பணியை மேற்கொள்வார் என்று கூறியிருந்தேன். மல்லிகார்ஜுன கார்கே உடனான சந்திப்பின்போது நான் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பாக பேசி இருந்தேன். அப்போது, பொறுமையாக இருங்கள். நான் உங்களை மீண்டும் அழைக்கிறேன் என்று கூறியிருந்தார்.
நண்பர்கள் புரிதல் இல்லாமல் பேசுவது கசப்பான உணர்வு
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே எனக்கு சில கசப்புணர்வுகள் ஏற்பட்டது. ஏனென்றால், நண்பர்கள் புரிதல் இல்லாமல் பேசுவது, செயல்படுவது அனைத்தும் விரும்பத் தகாத வகையில் இருந்தது. இதனால், எனது உள் மனது காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர வேண்டாம் என்று உணர்த்தியது. இனி மேலும் இந்த பதவியில் இருந்தால் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் பேசலாம். எனவே, காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்வதற்கான வாய்ப்பு இல்லை என்று என் உள் மனம் சொல்கிறது.
மேலும் படிக்க: ‘சைகை காட்டி கேலி செய்த எம்எல்ஏக்கள்’.. “இனி இப்படி செய்தால் அவ்ளோதான்!”.. ஸ்ட்ரிக்ட்டாக எச்சரித்த சபாநாயகர்!




எனது கோரிக்கையை காங்கிரஸ் தலைமை பரீசிலிக்கும்
இதே கருத்தை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரமே செய்தியாளர்கள் சந்திப்பின்போது தெரிவித்துள்ளேன். அப்போது, நான் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன். இந்த பதவியில் தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்று எனது தலைமையிடம் தெரிவித்துள்ளேன். இனிமேல், காங்கிரஸ் தலைமை எனது கோரிக்கையை பரிசீலனை செய்து என்னை அந்த பதவியில் இருந்து விடுவிக்கும் என்று நம்புகிறேன்.
விரைவில் மனம் திறந்து பேசுவேன்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம்பி, ஜோதிமணி எம்பி, விஸ்வநாதன் ஆகியோர் தொடர்பாக நான் விரைவில் மனம் திறந்து பேசுவேன் என்று தெரிவித்தார். இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் புயலை கிளப்பி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சிக்குள் கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு ஆகியவற்றில் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: நீங்கள் வாங்கிய மின்மாற்றிகள் லட்சணம் தெரியும்.. அமைதியாக இருக்கலாம் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் vs செந்தில் பாலாஜி..