AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில் பயணிகளே உஷார்.. இந்த தவறை மட்டும் செஞ்சீங்க.. அவ்ளோதான்.. ரயில்வே துறை எடுத்த கடும் நடவடிக்கை!

Railway fines : ரயில்கள், ரயில் நிலையங்களில் விதிமீறல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு கூடுதலை அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கான கூடுதல் தொகை உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இது தொடரபாக விரிவாக பார்க்கலாம் .

ரயில் பயணிகளே உஷார்.. இந்த தவறை மட்டும் செஞ்சீங்க.. அவ்ளோதான்.. ரயில்வே துறை எடுத்த கடும் நடவடிக்கை!
விதிமீறல்களுக்கு கூடுதல் அபராதம் அறிவிப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 22 Jun 2026 15:56 PM IST

நாட்டில் இந்திய ரயில்வே சட்டம் 1989- இன் கீழ் ரயில் துறையின் செயல்பாடுகளை வலுப்படுத்துவதற்காகவும், பயணிகளின் விதி மீறலை தடுப்பதற்காகவும் பல்வேறு திருத்தங்களை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ரயில்களில் விதிமீறல்களில் ஈடுபடும் பயணிகளுக்கான அபராத தொகை உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், ரயில்களில் பெண்கள் பெட்டியில் பயணிக்கும் ஆண் பயணிகளுக்கான அபராத தொகை ரூ. 500 இல் இருந்து ரூ.2,500- ஆக உயர்த்தப்பட உள்ளது. இதே போல, ரயில்களில் உரிய டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் பயணிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை ரூ. 250- இல் இருந்து ரூ. 500- ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் தினந்தோறும் ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

விதிமீறலில் ஈடுபடும் பணிகளுக்கு கூடுதல் அபராதம்

அவ்வாறு பயணம் செய்யும் பயணிகளில் சிலர் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு ஈடுபடும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அல்லது ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் விதிமீறல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை கணிசமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அமோனியா வாயு கசிவு விபத்து – தொழிலாளர் நலனில் சமரசம் கூடாது – உதயநிதி ஸ்டாலின் இரங்கல்

அதிகபட்சமாக ரூ. 10, 000 அபராதம் விதிப்பு

அதன்படி, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விதி மீறல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு குறைந்தபட்ச அபராத தொகை ரூ. 250 விதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த அபராத தொகை தற்போது ரூ.500 – ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல, சில குறிப்பிட்ட விதிமீறல்களில் ஈடுபடும் பயணிகளுக்கு அதிகபட்சமாக ரூ.5, 000 அபராத தொகை விதிக்கப்பட்டு வந்தது. தற்போது, அந்த அபராத தொகை ரூ. 10, 000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரயிலில் ஆபத்தான பொருள்கள் கொண்டு சென்றால்

மேலும், ரயில் நிலையங்களில் உரிய அனுமதி இல்லாமல் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு ரூ. 2, 000 அபராதம் விதிக்கப்படும். சாதாரண பயணிகள் மாற்றுத் திறனாளிகளுக்கான ரயில் பெட்டியில் பயணம் மேற்கொண்டால் ரூ.2, 000 அபராதமும், ரயில்களில் ஆபத்தான பொருட்களை கொண்டு சென்றால் ரூ. 10, 000 வரையும் அபராதம் விதிக்கப்படும். மேலும், ரயில் நிலையங்களிலோ, ரயில் பெட்டிகளிலோ அல்லது ரயிலில் உள்ள கழிவறைகளிலோ புகை பிடிக்கும் நபர்களுக்கு ரூ. 2, 000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மேலும் படிக்க: தமிழக அரசு பள்ளிகளில் 18,107 காலி பணியிடங்கள்.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

Follow Us