தமிழக அரசு பள்ளிகளில் 18,107 காலி பணியிடங்கள்.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
18,107 Teacher Vacancies In Tamil Nadu Government Schools | தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் 18,107 காலி பணியிடங்கள் உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவற்றில் தலைமை ஆசிரியர் பணி மட்டும் 1,214 என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ஜூன் 22 : தமிழகத்தில் (Tamil Nadu) உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் 18,107 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளதாக தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை (Tamil Nadu School Education Department) அறிவித்துள்ளது. முதுகலை ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகிய பணி இடங்களும் இதில் அடங்கும். போதிய அசிரியர்கள் இல்லாததன் காரணமாக மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும் சூழல் உள்ள நிலையில், விரைந்து ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 18,107 காலி பணியிடங்கள்
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தான், தற்போது தமிழக அரசு பள்ளிகளில் சுமார் 18,107 காலிப்பணியிடங்கள் உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களில் சுமார் 7,252 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்தபடியாக சுமார் 2,833 முதகலை ஆசிரியர் பணியிடங்களும், 1,214 தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு – முதல்வர் விஜய் உத்தரவு




திருவண்ணாமலையில் மட்டும் 93 ஆசிரியர் காலிப்பணியிடங்கள்
ஜூன் 11, 2026 அன்றைய நிலவரப்படி தமிழகத்தில் ஒப்பளிக்கப்பட்ட ஆரிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 14,248 ஆக உள்ளது. இந்த இடங்களில் வெறும் 96 ஆயிரத்து 141 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளதன் காரணமாக இந்த காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தமாக 18,107 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், அது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு மாணவர் மரணம் – கடிதம் எழுதிவிட்டு விபரீத முடிவு
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் புதிய புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த நிலையில், அரசு பள்ளிகள் தரமாக செயல்படவும், மாணவர்கள் சிறந்த கல்வியை பெறவும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.