AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தேர்தல் தோல்வி.. நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!!

இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக மீண்டும் ஒரு பெருத்த பின்னடைவைச் சந்தித்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் ஏன் சாதகமாக அமையவில்லை என்பதற்கான பின்னணிகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

தேர்தல் தோல்வி.. நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை மேற்கொண்ட இபிஎஸ்.. அதிமுகவில் பரபரப்பு!!
எடப்பாடி பழனிசாமி
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Jun 2026 12:42 PM IST

சென்னை, ஜுன் 21: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுக தரப்பில் தலா இரண்டு மாவட்டங்கள் என்ற அடிப்படையில் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக உட்கட்சி அரசியலில் மீண்டும் மோதல்களும் சலசலப்புகளும் வெடித்துள்ளன.

இதையும் படிக்க: “முஸ்லிம் லீக் முடிவையே மதிமுகவும் எடுக்கும்”.. யார் நண்பன், யார் பகைவன் என்பதை காட்டிய தேர்தல்.. ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

தேர்தல் தோல்வி குறித்த தீவிர ஆய்வு:

இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் அதிமுக மீண்டும் ஒரு பெருத்த பின்னடைவைச் சந்தித்ததற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார். அந்தந்த மாவட்டங்களில் தேர்தல் முடிவுகள் ஏன் சாதகமாக அமையவில்லை என்பதற்கான பின்னணிகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

கட்சி மறுக்கட்டமைப்பு மற்றும் நிர்வாகிகள் மாற்றம்:

கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் ஏதேனும் சீரமைப்புகள் செய்ய வேண்டுமா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் பலர், கட்சியை மறுக்கட்டமைப்பு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். குறிப்பாக, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை மாற்றி விட்டு, தகுதியுள்ள இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இபிஎஸ்-இடம் முன்வைத்தனர்.

கட்சித் தாவலைத் தடுக்க இபிஎஸ் அறிவுறுத்தல்:

அதிமுகவிலிருந்து கணிசமான நிர்வாகிகள் மாற்றுத் தொண்டர்களுடனும், மாற்றுப் பின்னணியுடனும் பிற கட்சிகளுக்குச் செல்லத் தொடங்கியுள்ள சூழ்நிலையில், அதற்கான காரணங்கள் குறித்தும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார். தொடர்ந்து பேசிய அவர், நிர்வாகிகள் யாரும் தொய்வடையாமல், கட்சிப் பணிகளில் சுணக்கமின்றி விரைவாக ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் புதிய நம்பிக்கையை ஊட்டி கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகள் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: “அமைச்சராக பெருமை இல்லை.. தளபதியின் நண்பன் என்பதில் தான் பெருமை!”.. அமைச்சர் ஸ்ரீநாத் நெகிழ்ச்சி!!

“கூட்டமாக கூவிய குள்ளநரிகள்” என பேனர்:

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு வைக்கப்பட்டுள்ள ஒரு சர்ச்சை பேனரால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. அதில், இபிஎஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் உள்ள மூத்த நிர்வாகிகளைக் கடுமையாகச் சாடி வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. “சில குள்ளநரிகள் ஒன்று கூடி அதிமுக தலைமைக்கு எதிராக குரல் எழுப்பினார்கள்”. கூட்டமாக நின்று கூவிய குள்ளநரிகள், இன்றைக்கு தனித்து நின்று பேசக்கூடிய குள்ளநரிகளாக மாறியிருக்கின்றன. அதாவது, முன்பு பலர் ஒன்றாகச் சேர்ந்து பொதுச்செயலாளருக்கு எதிராகப் பேசினர், ஆனால் தற்போது அவர்கள் கட்சியில் தனித்து விடப்பட்டு, தனியாக நின்று செய்தியாளர் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் இந்த வாசகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

Follow Us