தவெக ஆட்சியிலும் ஹிந்துக்கள் மீதான விரோதம் தொடர்கிறது.. நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!
Nainar Nagendran Condemned: திருப்பரங்குன்றம் தீபத்தூணியில் தீப எற்றுவதறக்கு அனுமதி அளித்து உத்தரவிட்ட இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழக அரசு மேல் முறையீடு செய்யதாக கூறப்படும் நிலையில், தமிழக பாரதிய ஜனதா கட்சின் மாநில தலைரர் நயினார் தெரவித்தா்.
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உத்தரவு பிறப்பித்திருந்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் இரு நீதிபதிகள் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ததை தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மதுரை மாவட்டம், திருப்பத்தூர் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஆணை பிறப்பித்த இரு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதாக ஜோசப் விஜய் தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஹிந்து விரோத முகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தமிழர் பண்பாட்டு உரிமையான தீபம் ஏற்றுவதை முந்தைய ஹிந்து விரோத திராவிட முன்னேற்றக் கழக அரசு தடுத்து நிறுத்தி இருந்தது.
திமுகவின் சதி சுவடுகளை பின்பற்றும் தவெக அரசு
தற்போது, தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகமும் அதை சதி சுவடுகளை பின்பற்றி மக்களின் உரிமைகளை பறிப்பது தான் முதல்- அமைச்சர் ஜோசப் விஜய்யின் மாற்று சக்தியா? இதுதான் அனைவருக்கும் சமமான அரசா?. ஆனால், ஒன்று நிச்சயம்! அதிகார மாமதையில், பொது மக்களின் மத உரிமைகளை முடக்கி போட எத்தனை ஆட்சியாளர்கள் மேல்முறையீடு செய்தாலும், தர்மம் ஒருபோதும் தோற்காது என்ற உறுதியான நம்பிக்கை தமிழக மக்கள் மத்தியில் உள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடியை மிரட்டிய ‘மினி டொர்னடோ’.. உருவானது எப்படி?.. விளக்கும் வானிலை மையம்!
தமிழர் பண்பாட்டு உரிமை காக்கப்படும்
எங்கு சென்றாலும் நீதி வெல்லும், தமிழர் பண்பாட்டு உரிமை காக்கப்படும். திருப்பரங்குன்றம் தீபத்தூண் நிச்சயம் ஒளிரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இது தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டது. ஆனால், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்
இது தொடர்பான இருதரப்பை சேர்ந்த மனுக்கள் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில், ஒரு நீதிபதி அளித்த உத்தரவை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து உத்தரவு பிறப்பித்தது. அதில், ஒரு நீதிபதி அமர்வு வழங்கிய உத்தரவு சரிதான் என்று குறிப்பிட்டிருந்தது. இருந்தாலும், தற்போது வரை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ரயில் பயணிகளே உஷார்.. இந்த தவறை மட்டும் செஞ்சீங்க.. அவ்ளோதான்.. ரயில்வே துறை எடுத்த கடும் நடவடிக்கை!


