திருச்செந்தூர் கோயிலில் சேவைக் கட்டணம் உயர்த்த முடிவு – எவ்வளவு தெரியுமா?
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விலைவாசி உயர்வு, கோயில் வருவாய் குறைந்ததால் சேவைக் கட்டணம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சேவைக் கட்டண உயர்வு தொடர்பாக ஆட்சேபணை இருப்பின் ஜூலை 7க்குள் எழுத்துப்பூர்வமாக கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஜூன் 23 : தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அடிக்கடி ஆய்வுகள் செய்து அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி வருகிறது. அந்த வகையில் கோவில்களில் விற்கப்படும் உணவுப்பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கே விற்கப்பட வேண்டும், உணவுப்பொருட்களில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியான தேதி ஆகியவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சேவைக்கட்டணத்தை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்செந்தூர் கோயிலில் சேவைக் கட்டணம் உயர்த்த முடிவு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் பல்வேறு சேவைக் கட்டணங்களை உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விலைவாசி உயர்வு, கோயில் வருவாய் குறைந்ததால் சேவைக் கட்டணம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் படி, திருச்செந்தூரில் தங்க ரத உலா திட்டத்துக்கான சேவைக் கட்டணம் ரூ.2,500-ல் இருந்து ரூ.5,000ஆக உயர்த்த பரிசீலனை செய்து வருவதாக தகவல் தெரிவிக்கினறன. சண்முகார்ச்சனைக்கான கட்டணம் ரூ.5,000-ல் இருந்து ரூ.30,000ஆக உயர்த்த திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அபிஷேக தரிசன கட்டணம் சாதாரண நாட்களில் ரூ.500, விழா நாட்களில் ரூ.2,000 என்பதை ரூ.2,500ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சேவைக் கட்டண உயர்வு தொடர்பாக ஆட்சேபணை இருப்பின் ஜூலை 7க்குள் எழுத்துப்பூர்வமாக கூறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : தவெக எம்எல்ஏ பல்லவி ஆண் குழந்தைக்கு “டிவிகே” என பெயர்… முதல்வர் ஜோசப் விஜய் சூட்டினார்!




முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் ரமேஷிடமே திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது. மேலும், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரூ.100 கட்டண ரசீது வழங்கியதில் முறைக்கேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில் விசாரணையின் போது ரூ. 25 லட்சம் அளவுக்கு முறைக்கேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் இதில் தொடர்புடையதாக கூறப்படும் கோவில் ஊழியர் மேனகா என்பவரை கோவில் இணை ஆணையர் ராமு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
86389
இதனையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் கோவில் பணியாளர் மேனகா பணியில் இருந்த நேரத்தில் மோசடி நடந்திருப்பது உறுதியாகியுள்ளது. அவர் இதுவரை ரூ. 25,24,100 பணத்தை முறைகேடு செய்துள்ளார். இதன் காரணமாக மேனகா தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து ஆய்வு செய்யாமல் இருந்த கோவில் பணியாளர்கள் பாலமுருகன் மற்றும் உச்சிமாகாளி ஆகியோரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.